திருநெல்வேலியில், ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்

திருநெல்வேலியில், ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்


திருநெல்வேலியில், ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்! ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் தலைமையில், புகழ் அஞ்சலி! 

திருநெல்வேலி,ஆக.30:'

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின், முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின், 20-ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (ஆகஸ்ட்.30) தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், வண்ணார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள,  மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த,  ஜி.கே. மூப்பனாரின்,    திருவுருவப்படத்திற்கு, ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள்  இணை அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன்,"மலர் மாலைகள்" அணிவித்தும், "மலர்" தூவியும், " புகழ் அஞ்சலி" செலுத்தினார். அவரை தொடர்ந்து,மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன், மாநகர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், மனோகரன், துணை தலைவர்கள் வெள்ளைபாண்டியன், கவிப்பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன்,  செயலாளர்கள்  ரயில்வே கிருஷ்ணன், குறிச்சி கிருஷ்ணன்,  மண்டல தலைவர்கள் எஸ்.எஸ். மாரியப்பன், முஹம்மது அனஸ் ராஜா, ரசூல் மைதீன், கெங்கராஜ்,அய்யப்பன்,கோட்டூர் முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி அனீஸ் பாத்திமா  உட்பட, பலரும் மலர் தூவி, " மரியாதை" செய்தனர்.