கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் 75வது சுதந்திர தின விழா

கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில்  75வது சுதந்திர தின விழா 


மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர்  அவர்களுடைய திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட மங்கைநல்லூர் கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய உயர்திரு. இராமலிங்கம் ஐயா அவர்கள் தமிழாசிரியர் தலைமை ஏற்க, ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் அவர்கள் முன்னிலை வகிக்க, பள்ளியின் இசை ஆசிரியை உயர்திரு. தனலட்சுமி அம்மையார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.

 விழாவில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜெயின் யுவா மண்டல் மகாவீர் ஜெயின்  ஜோதி பவுண்டேஷன் செயலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் பழனிச்சாமி, ராஜமாணிக்கம், மற்றும் கிங் பைசல் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்...