மானூரில், 7 கோடியே, 80 லட்சம் ரூபாய் மதிப்பில்,முதலமைச்சர் திறந்து வைத்த காவலர் குடியிருப்புகள்

மானூரில், 7 கோடியே,  80 லட்சம் ரூபாய் மதிப்பில்,முதலமைச்சர் திறந்து வைத்த காவலர் குடியிருப்புகள்


திருநெல்வேலி மாவட்டம் மானூரில், 7 கோடியே,  80 லட்சம் ரூபாய் மதிப்பில்,புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள,காவலர் குடியிருப்புகளை, முதலமைச்சர் காணொளி காட்சி மூலம், திறந்து வைத்தார்! மானூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,ஆக.30:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட்.30) காலையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, தமிழ்நாட்டில் சுமார் 106 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை கட்டிடங்களை,திறந்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம் மானூரில், 7 கோடியே, 80 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள,                "காவலர் குடியிருப்பு" கட்டிடங்களையும், முதலமைச்சர் ஸ்டாலின்,திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவின் போது, மானூரில் நடைபெற்ற விழாவில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் பங்கேற்று, " குத்து விளக்கு" ஏற்றி வைத்து, விழாவினை, சிறப்பித்தார். இன்று (ஆகஸ்ட்.30) புதிதாக திறந்து வைக்கப்பட்ட, மானூர் காவலர் குடியிருப்பில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கென, மொத்தம் 52 வீடுகள் அமைந்துள்ளன! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். திறப்பு விழா நிகழ்ச்சியில், தாழையூத்து காவல் உட்கோட்ட, "காவல் துணை கண்காணிப்பாளர்"  ஜெபராஜ், மானூர் காவல் ஆய்வாளர்கள் ரவி, ரெங்கசாமி மற்றும் காவலர்கள், கலந்து கொண்டனர்.