தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏமாற்று வேலையா......?

 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏமாற்று வேலையா......?



ஒருவழியாக ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுற்றது. தேர்தல் முடியும் வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடக்கூடாது என்ற தடை இருந்ததால் ஏற்கனவே சில மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்கள் பற்றிய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படாமல் இருந்தது. நேற்று தேர்தல் முடிந்ததோ இல்லையோ இவர்கள் தங்கள் வேலையை தொடங்கி விட்டார்கள். 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஏமாற்று வேலைதான். இதை எதற்காக செய்கிறார்கள் என்று சொன்னாள் இதன் மூலமாவது சில வெற்றிகளைப் பெறலாம் என்று சில கட்சிகள் முயற்சிப்பது தான் இதற்கு காரணம்.



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இதை நாம்  ஒரு முழுமையான தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் என்று சொன்னால் இது ஒட்டுமொத்த மக்களின் முடிவு அல்ல. ஏதோ போகிற போக்கில் யாரோ ஒரு சிலரிடம் கேட்கப்படுகின்ற கருத்துக்களுக்கு கிடைக்கின்ற பதில்கள் எல்லாம்  வெற்றிகளை தீர்மானிக்காது. 

பெரும்பாலும் இத்தகைய கணிப்புகள் நகரங்களை சுற்றியே எடுக்கப்பட்டு வருகிறது நகரங்களில் பெரும்பாலும் யாரும் சரியாக வாக்களிப்பதில்லை. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் எத்தனை பேர் உண்மையாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை. எனவே இது அவ்வளவு நம்பகத்தன்மை கொண்டது அல்ல. 

கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் கிராமங்களுக்கு சென்று நடத்தவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு உண்மை நிலை தெரியவரும். ஓட்டு போட்டுவிட்டு  வந்தவர்களிடம் கருத்து கேட்டோம் என்று சொல்கிறார்கள். வாக்குச்சாவடிக்கு 200 மீட்டருக்குள் யாரிடமும் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் யாரிடமும் நின்று கூட பேச முடியாது அப்படியே பேசினாலும் 200 மீட்டர் தள்ளி அங்குள்ள சிறு கூட்டத்தினரிடம் தான் பேச முடியும். அந்தக் கூட்டம் யார் என்று பார்த்தால் ஏதோ ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஆகத்தான் இருப்பார்கள். அங்கே நடத்தப்படுகின்ற கருத்துக்கணிப்புகள் எப்படி சரியாக இருக்கும். இதுதான் அனைத்துப் பகுதிகளிலும் நடக்கிறது.

அப்படி எடுத்த சர்வே முடிவுகளை தான் இப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு ஆடவும் முடியாது பாடவும் முடியாது ஒரு சில நாட்களுக்கு வேண்டுமானால் நான் தான் அடுத்த முதல்வர் என்று சந்தோஷமாக இருந்து கொள்ளலாம்.

வேறு எதையும் செய்ய முடியாது .உண்மையான முடிவுகள் மே இரண்டாம் தேதி பிற்பகல் தெரிந்துவிடும்.

அதுவரை அமைதி காப்போம்....!