சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 261-வது பிறந்தநாள் நிகழ்ச்சி


சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 261-வது பிறந்தநாள் நிகழ்ச்சி



ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கலெக்டர் நுழைவு வாயில் அருகிலுள்ள ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 261-வது பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் ராஜா N.குமரன் சேதுபதி, சேதுபதியின் சிலைக்கு  மாலை அணிவித்து வணங்கினார். இதனையடுத்து மாவட்ட BJP தலைவர் முரளிதரன் மாலையிட்டு வணங்கினார்.  உடன் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் நலச்சங்க செயலாளர் ராஜேந்திரன், 



மகளிரணி செயலாளர் உமா மேகஸ்வரி, மாநில பொருளாளர் J.பிரசாத், S. லெட்சுமணன், செல்வராஜ் மற்றும் முத்துராமலிங்க சேதுபதியின வாரிசுதாரர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதனையடுத்து ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி, மாவட்ட BJP தலைவர் முரளிதரனுக்கும்  வாரிசுதாரர்களின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி  N.A. ஜெரினா பானு