வேலூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச உணவகம்

வேலூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச உணவகம் 

வேலூர் மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக விலை இல்லா உணவகம் இளையதளபதி விஜயின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு 15 2 2020 1 முதல் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை அருகில் செயல்பட்டு வருகிறது. இதை இம்மன்றத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் அவர்கள் நடத்தி வருகிறார்.

இந்த விலையில்லா உணவகத்தின் மூலம் தினமும் 109 நபர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது .

இந்தப் பணியை நாங்கள் குரானா காலத்திலே தொடங்கினோம் அரசு இதற்கு உரிய அனுமதி வழங்காத காரணத்தால் அப்போது அதை தொடர்ந்து செயல்படுத்த இயலவில்லை. அதனால் தற்போது இதை செய்யத் துவங்கி வரும் இந்த பணி மென்மேலும் தொடரும் தினமும் 109 பேர்களுக்கு என்பது இன்னும் விரிவாக்கம் செய்யப்பட்டு பலருக்கு வழங்குகின்ற வாய்ப்புகளை உருவாக்கும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட செய்திகளுக்காக டி ராஜசேகர்.