கொத்தடிமை முறைமை ஒழிப்பு நாளை முன்னிட்டு ஓபிஎஸ் போட்ட ட்வீட்..

 கொத்தடிமை முறைமை ஒழிப்பு நாளை முன்னிட்டு ஓபிஎஸ் போட்ட ட்வீட்.. கொத்தடிமை முறைமை ஒழிப்பு நாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் ஏதோ அரசியல் இருப்பதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. 

சசிகலா விவகாரத்தில் அவரை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பதில் முதல்வர் ஈபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் துணை முதல்வர் ஓபிஎஸ் மவுனமாக இருந்து வருகிறார். சசிகலா நலம்பெற ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ், தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் ஓபிஎஸ்ஸோ நேரம் வரட்டும் என காத்திருக்கிறார். 

இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் போட்ட ட்விட்டர் பதிவு: கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். "யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்! இவ்வாறு ஓபிஎஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.