வெறும் ரூ.7 லட்சத்தில் எலக்ட்ரிக் கார்..!
வெறும் ரூ.7 லட்சத்தில் எலக்ட்ரிக் கார்..!

ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிப்பைத் தடை செய்ய ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் மற்றும் விற்பனையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது டெஸ்லா, இந்தியாவில் தனது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்யப் புதிதாக ஒரு நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மாடல் 3 காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு டெஸ்லா சுமார் 55 - 60 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளது.

இதேவேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்திய மக்களுக்காக வெறும் 7 லட்சம் ரூபாயில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம்
 

மாருதி சுசூகி நிறுவனம்

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு வரும் மாருதி சுசூகி நிறுவனம், தனது வெற்றிகரமான பிராண்டான வேகன்ஆர் பிராண்டின் கீழ் புதிதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக மோட்டார் ஆக்டேன் தளம் தெரிவித்துள்ளது.

7 லட்சம் ரூபாய்

7 லட்சம் ரூபாய்

பல தளங்கள் மாருதி சுசூகி எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாருதி சுசூகி இந்திய மக்களுக்காகவே பட்ஜெட் விலையில் வெறும் 7 லட்சம் ரூபாயில் வேகன்ஆர் காரை தயாரித்துச் சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

250 கிலோமீட்டர் தூரம்

250 கிலோமீட்டர் தூரம்

இந்தக் கார் வெறும் 6 மணிநேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்து உள்ளதாகவும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையில் செல்லும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றும் மோட்டார் ஆக்டேன் தெரிவித்துள்ளது.

டாடா நெக்சான் EV கார்
 

டாடா நெக்சான் EV கார்

மேலும் தற்போது சந்தையில் இருக்கும் டாடா நெக்சான் EV கார்-ஐ விடவும் திறன் அளவில் சற்று குறைவாக இருந்தாலும், விலை அளவை ஒப்பிடுகையில் இந்திய சந்தைக்கு மாருதி சுசூகியின் எலக்ட்ரிக் வேகன்ஆர் கார் மிகவும் சரியான தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் எலக்ட்ரிக் கார்

பட்ஜெட் எலக்ட்ரிக் கார்

இந்தியாவில் அடுத்தச் சில மாதங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் 3 எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாருதி சுசூகியின் வேகன்ஆர், டாடாவின் ஆல்டிரோஸ் EV, மஹிந்திராவின் eKUV100 ஆகிய நிறுவனங்கள் தனது தயாரிப்பை வெளியிட உள்ளது.

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும், இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு எல்க்ட்ரிக் வாகன உலகிற்குத் தயாராகி வருகிறது.

பிரிட்டன் 2030 இலக்கு

பிரிட்டன் 2030 இலக்கு

இதில் மிகவும் முக்கியமாகப் பிரிட்டன் 2030ஆம் ஆண்டுக்குள் தன் நாட்டில் பெட்ரோல், டீசல் கார்கள் தயாரிப்பை 100% சதவீதம் முழுமையாக நிறுத்த திட்டமிட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தான்.