மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்ய ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..

மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்ய ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..

மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்ய வரும் ஏப்ரல் 1ம் தேதி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்

தற்போதைய நிலையில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற, மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் தர வேண்டும்.

ADVERTISEMENT
Ads by

அதனுடன், பெயர் மாறியுள்ள சொத்து விபரம், சொத்து வரி, வாரிசு சான்றிதழ் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். நுகர்வோர், முறையாக ஆவணங்களை வழங்க வேண்டும்.

ஆன்லைன் முறை

ஆன்லைன் முறை

அதிகாரிகள் விசாரித்த பின்னரே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வார்கள். இதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்வதை எளிதாக்கும் வகையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளளனர்ன

மின்வாரியம்

மின்வாரியம்

இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இணையத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோர் மின் இணைப்புப் பெயா் மாற்றம் விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கு நிர்வாகத்தின் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளார்

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

எனவே, நிலம் விற்பனை, நிலம் பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, நிலத்தை தானம் வழங்குதல், உரிமையாளா் இறப்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட இணைப்புகளின் பெயரை மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிப்போர் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, தற்போதைய உரிமையாளா் பெயா், இணைப்பு எண் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

7 நாளில் சான்று

7 நாளில் சான்று

இத்துடன் உரிய கட்டணம் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் பெற்றதும், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக அதிகாரியே பெயா் மாற்றம் செய்து அன்றைய நாளே நடவடிக்கை எடுக்கலாம். தவறுதலான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால் விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதேநேரம், அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் கட்டாயம் பெயா் மாற்றம் செய்து சான்று வழங்க வேண்டும். இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.