சிம்பு எடுத்த அதிரடி முடிவு.....?

  சிம்பு எடுத்த அதிரடி முடிவு...?உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து ஒல்லியான பிறகு சிம்பு ஆளே மாறிவிட்டார். சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறார். காட்சிக ளை ஒரே டேக்கில் நடித்து படக்குழுவை அசத்துகிறார். தன் புகைப்படங்கள், வீடியோக்கள், பட அப்டேட்டுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

புது ஆளாக மாறிய பிறகு கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. சிம்பு, சுசீந்திரன் மீண்டும் கூட்டணி சேரும் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு, டிரஸ்ட் ஆரம்பித்து ஏழைகளுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்திருக்கிறார். மேலும் தன் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களை அவ்வப்போது சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண தீர்மானித்துள்ளாராம் சிம்பு.

டிரஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் இந்த முடிவு குறித்து அறிந்தவர்கள், என்ன அரசியலுக்கு வரப் போகிறாரா, அதற்கு முன்னோட்டமாக இதை எல்லாம் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிம்புவின் ஈஸ்வரன் படம் விஜய்யின் மாஸ்டருடன் சேர்ந்து பொங்கலுக்கு வருகிறது. இந்நிலையில் தன் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்குமாறும், விஜய் ரசிகர்கள் ஈஸ்வரனை பார்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் சிம்பு. அவரின் அறிக்கையை பார்த்த விஜய் ரசிகர்கள், ஈஸ்வரனும், மாஸ்டரும் பொங்கலுக்கு மோதவில்லை மாறாக சேர்ந்து வருகிறார்கள். அண்ணனையும், தம்பியையும் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தியேட்டர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.