வேலூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 72 வது குடியரசு தின விழா

வேலூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 72 வது குடியரசு தின விழாநமது நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் ஆக்சிலியம் காலேஜ் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் ஓபிசி சார்பாக குடியரசு விழா கொண்டாடப்பட்டது. அதில் வேலூர் மாவட்ட மாநகர தலைவர் டிக்கா ராமன் தலைமையில், வேலூர் மாவட்ட மாநகர ஓபிசி தலைவர் D. நோபல் லிவிங்ஸ்டன் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அச்சமயம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் திருமால், எம்எஸ் மணி ,வேதநாயகம் ,வேதகன், ஜான்பீட்டர் ,சார்லஸ் ,ராஜா ,கஜேந்திரன், ஹரி கோபால் , விக்னேஷ் , உமா சங்கர் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.