பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்: கட்சியை நிர்வகிக்க 11 பேர் குழு: அதிமுக பொதுக் குழு தீர்மானம்

பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்: கட்சியை நிர்வகிக்க 11 பேர் குழு: அதிமுக பொதுக் குழு தீர்மானம்.எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வரும் வேளையில், கட்சியின் தேர்தல் செயல்பாடுகள், முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரங்கள் தொடர்பான 16 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியுள்ளது.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முடிவு செய்துள்ளதால், இந்த முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வெளிப்படையாக தெரிவிக்கும் கூட்டமாக இந்த பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது.