இயேசு கிறிஸ்துவின் ஆசியோடு மீண்டும் தி.மு.க. ஆட்சி..” - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இயேசு கிறிஸ்துவின் ஆசியோடு மீண்டும் தி.மு.க. ஆட்சி..” - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.    திருச்சி பாலக்கரை பழைய கோவில் வளாகத்தில் உள்ள ஜெபமாலை மாதா அரங்கத்தில் இவ்விழா நடைபெற்றது. திருச்சி மறைமாவட்ட மக்கள் தொடர்பாளர் அருட்தந்தை யூஜின் மற்றும் பங்கு தந்தைகள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.    இதில், சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “எப்போதும் தி.மு.க. சிறுபான்மையினருக்காகப் பாடுபடக்கூடியவர்கள். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் ஆசியோடு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தால் சிறுபான்மையினரின் அனைத்து கோரிக்கைகளும் நலனும் நிறைவேற்றப்பட்டுப் பாதுகாக்கப்படும்” என்று பேசினார்.    

அப்ப மத்த சாமி எதுவும் உங்களை காப்பாற்றாதா....?