நடிகர் பார்த்திபன் துவங்கும் புதிய கட்சி புதியபாதை கட்சி

 எனது கட்சியின் பெயர் புதிய பாதை கட்சி…. புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அறிவிப்பு!


 


 எனது கட்சியின் பெயர் புதிய பாதை கட்சி…. புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அறிவிப்பு:
புதுச்சேரி: எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருதை பெற்ற பின் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனம் இணைந்து இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. 37-வது ஆண்டாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கு “ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டிற்கான சிறந்த படமாக “ஒத்த செருப்பு அளவு 7” என்கிற தமிழ் திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.

இத்திரைபடத்தின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனுக்கு மாநில அரசு சார்பில் விருது மற்றும் ஒரு லட்ச ரொக்கப் பரிசுக்கான காசோலையினை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். முன்னதாக விழாவில் பேசிய பார்த்திபன், பல திரைப்படங்கள் தோல்விகள் அடைந்தாலும் ரசிகர்களின் ரசனை காரணமாக ஒத்த செருப்பு போன்ற படங்கள் எடுக்க முடிந்ததாகவும், மேலும் புதிய கட்சி துவங்கலாம் என நினைப்பதாகவும், அந்த கட்சியின் பெயர் புதிய பாதை எனவும் நகைச்சுவையாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவிற்கு பின்னர் புதுச்சேரியில் படபிடிப்பிற்கான கட்டணம் அதிகமாகி உள்ளதாகவும் இதன் காரணமாக சென்னையில் பட பிடிப்பு நடத்தலாம் என தோனுவதாகவும் எனவே கட்டணத்தை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வரப்போகும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என மக்கள் குழம்பி போய் உள்ள நிலையில் நடிகர்களின் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

ஏற்கனவே நடிகர்கள் அரியலுக்குள் வந்தபோது சிறப்பான ஆட்சியை கொடுத்து உள்ளனர். அதோபோல் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இதேபோல் நடிகர்கள் என்பதால் அவர்களை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும் தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என நம்பிக்கை தெரிவித்த அவர், இளைஞர்கள் அனைவருமே அரசியலுக்கு வரவேண்டும் என்பது தனது விருப்பம் என்றார்.