வாட்ஸ் ஆப்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்....?


நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கேயும் எப்போதும் தொடர்பிலிருப்பதற்காக 180 நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் WhatsApp1-ஐ பயன்படுத்துகின்றனர். WhatsApp இலவசமானது2. மேலும் இது உலகமெங்கும் உள்ள மொபைல்களில் எளிய, பாதுகாப்பான, நம்பகமான செய்தி பரிமாற்றம் மற்றும் அழைப்பு அம்சங்களை வழங்குகிறது.

1ஆம், WhatsApp என்பது What's Up என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.

2டேட்டா கட்டணங்கள் பொருந்தும்

SMS-க்கு ஒரு மாற்றாகவே WhatsApp தொடங்கப்பட்டது. உரைச் செய்திகள், புகைப்படங்கள், காணொலிகள், ஆவணங்கள், இருப்பிடம் போன்ற பல்வேறு ஊடகக்கோப்புகளை அனுப்புவதையும் பெறுவதையும் எங்கள் தயாரிப்பு ஆதரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குரல் அழைப்புகளையும் செய்யலாம். உங்கள் தனிப்பட்ட தருணங்கள் WhatsApp வழியாகப் பகிரப்படுகின்றன, இந்தக் காரணத்தாலேயே எங்கள் செயலியில் முழு மறையாக்கத்தைக் கட்டமைத்துள்ளோம். தயாரிப்பு தொடர்பாக நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின்னணியிலும், மக்கள் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவருடனும் எந்தத் தடையுமின்றி தொடர்புகொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறோம்.
WhatsApp ஜேன் கோம் மற்றும் பிரையான் ஆக்டன் என்பவர்களால் துவங்கப்பட்டது. இவர்கள் Yahoo நிறுவனத்தில் 20 வருடங்கள் ஒன்றாக பணியாற்றியவர்கள். 2014ஆம் ஆண்டில் Facebook உடன் WhatsApp இணைந்தது. ஆனால் இன்னும் தனிப்பட்ட செயலியாக, வேகம் மற்றும் நம்பகமான செய்தியிடல் சேவையை உலகெங்கும் வழங்குவதில் சீரொளி இலக்குடன் இயங்குகிறது.