திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வேண்டுமானால் தவறு நடக்கும்

 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வேண்டுமானால் தவறு நடக்கும்

முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி தூத்துக்குடி விமான நிலைத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:



இன்றையதினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளேன். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நாகர்கோவில் செல்லவிருக்கிறேன். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிறிஸ்துமஸ்  விழாவில் கலந்துகொண்டு அங்கிருக்கின்ற சகோதரர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ளேன். அத்துடன், நாளைய தினம்  மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சர் அவர்கள் இல்ல நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கும் வந்துள்ளேன்.
கேள்வி: அரசின் மீது ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறரே?
பதில்: நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை அவர் இதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். இன்றைக்கு புதிதாகச் சொல்லவில்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டிருப்பவர் இன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கின்றார்கள். அதேபோல், டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில், நிவர் மற்றும் புரெவி புயலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த இரண்டையும் கருத்தில்கொண்டு ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைபடி வருகிற தைத்பொங்கலன்று அனைத்து குடும்பங்களிலும் தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்கிற காரணத்தால்தான் அனைத்து அரிசி பெறும் குடும்பஅட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2,500 வழங்கப்படுமென்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். பொங்கல் தொகுப்பு அறிவிப்பையும் வெளியிட்டேன். அது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் வேண்டுமென்றே, திட்டமிட்டு, அவதூறான, பொய்யான குற்றச்சாட்டை எங்கள் அரசு மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தி, அதை ஒரு அறிக்கையின் வாயிலாக மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் கொடுத்துள்ளார். இவையெல்லாம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுதான்.
கேள்வி: ரங்கராஜன் கமிட்டி அறிக்கையில் வேறு எந்த மாதிரியான விஷயங்கள் கொடுத்துள்ளார்கள்? 
பதில்: நிறைய கொடுத்துள்ளார்கள். தொழில் துறையில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
கேள்வி: அந்தப் பரிந்துரைகளை ஏற்று, நீங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில்: முடிந்தளவிற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருகிறோம். அதில் ஒன்று, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாக வேண்டுமென்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த காலகட்டத்திலும் இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்.


கேள்வி: தென்மாவட்ட வளர்ச்சிக்கு தொழில் துறையில் முக்கியத்துவம் அளிப்பீர்களா?
பதில்: நிச்சயமாக. தென் மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்குவதற்கு நாங்கள் பல்வேறு சலுகைகளை அளிக்கிறோம். நிலம் வாங்குவதற்கு அரசாங்கம் 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், மேலும் பல்வேறு சலுகைகள் வழங்கத் தயாராக இருக்கிறோம். யார் தொழில் தொடங்க வந்தாலும், அவர்களை எங்களுடைய அரசு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும்.
கேள்வி: வேளாண் சட்டம், சிலிண்டர் விலை உயர்வு இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசை நீங்கள் எதிர்த்துக் கேள்வி கேட்டவில்லையென்று...
பதில்: நான் ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதன் விலையைக் குறைக்க வேண்டுமென்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கேள்வி: சாலை அமைக்க, ரூபாய் 6,133 கோடி டெண்டரை முதலமைச்சரின் உறவினருக்கு வழங்கியுள்ளார் என்று முதல் குற்றச்சாட்டாக அதைத்தான் கொடுத்துள்ளார்.
பதில்: அவர்கள் காலம் போல் எங்கள் காலத்தில் டெண்டர் வழிமுறைகள் இல்லை. இப்போதெல்லாம் இ-டெண்டர். அதனை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் 
இ-டெண்டரில் கலந்துகொள்ளலாம். அவருடைய காலத்தில் டெண்டர் எடுத்தவர்கள்தான் இப்போதும் எடுத்திருக்கிறார்கள், புதிதாக யாரும் டெண்டர் எடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் யாரெல்லாம் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்கள்தான் இப்போதும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். விதிமீறல் இருந்தால் தவறு. இவர் யார் மீதெல்லாம் குற்றம் சொல்கிறாரோ, அவர்களெல்லாம், அவருடைய காலத்தில் பாக்ஸ் டெண்டரில் பங்கேற்றவர்கள். அப்போது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இப்போது அப்படியில்லை. ஆன்-லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என இருக்கும்போது அதில் எப்படி தவறு நடக்கும். 
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வேண்டுமானால் தவறு நடக்கும். அதற்கு சில உதாரணங்களைத் தெரிவிக்கின்றேன். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மதிப்பீடு ரூபாய் 200 கோடி என்று கொடுத்து, ரூபாய் 425 கோடி பில் போட்டு செய்கிறார்கள். மதிப்பீட்டிற்கும், உண்மையான தொகைக்கும் சற்று ஏறக்குறைய 10 முதல் 15 விழுக்காடு வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஏறத்தாழ 130 மடங்கு அதிகமாக உள்ளது. இதுதான் ஊழல் என்று நாங்கள் சொல்கிறோம். எங்களைப் பார்த்து ஊழல் என்று சொன்னால், என்ன ஊழல் என்று சொன்னால்தானே நாங்கள் பதில் சொல்லமுடியும். இதை நான் ஊழல் என்று சொல்வதற்கு இதுவரை அதற்கு அவர் மறுப்பே சொல்லவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கியிருக்கிறார். இரண்டாவது, -ஐ உலக வங்கியிலிருந்து பணம் பெற்று அமல்படுத்தும் திட்டத்தை முதலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் கொண்டு வந்தார்கள். அப்போது ஆற்காடு முதல் திருவாரூர் வரையுள்ள சாலையின் மொத்த நீளம் 377.36 கிலோ மீட்டர். ஒப்பந்த தொகையின் மதிப்பு ரூபாய் 611.70 கோடி. கொடுத்தது ரூபாய் 773 கோடி. இப்போது அவர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள். 26.43 விழுக்காடு அதிகரித்துக் கொடுத்துள்ளார்கள், இதுதான் ஊழல். நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரையுள்ள 117.40 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூபாய் 198.77 கோடி. ஆனால், 36.47 விழுக்காடு, அதாவது ரூபாய் 72.49 கோடி அதிகரித்து ரூபாய் 271.26 கோடி கொடுத்துள்ளார்கள். இது ளுஉhநனரடந-இல் குறிப்பிடப்பட்ட தொகையல்ல, வேலை செய்ய செய்ய அதிகரித்துக் கொடுத்திருக்கிறார்கள். 
இராமநாதபுரம் முதல் கட்டுமாவடி வரையுள்ள 143.40 கிலோமீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூபாய் 143.41 கோடி. ஆனால், 77.67 விழுக்காடு, அதாவது ரூபாய் 111 கோடி அதிகரித்து ரூபாய் 254.80 கோடி கொடுத்துள்ளார்கள். இது ளுஉhநனரடந-ல் குறிப்பிடப்பட்ட தொகையல்ல, வேலை செய்ய செய்ய அதிகரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை வரையுள்ள 
114.67 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை 
ரூபாய் 119.26 கோடி. ஆனால், 71 விழுக்காடு, அதாவது ரூபாய் 84.72 கோடி அதிகரித்து ரூபாய் 203.98 கோடி கொடுத்துள்ளார்கள். இவ்வளவும் அவர்கள் ஆட்சியில் செய்த தில்லுமுல்லு. இதெல்லாம் க்ஷடிஒ கூநனேநச. ஆனால், நாங்கள் இதே -ல் 
ஆன்-லைனில் டெண்டர் விட்டோம். இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், சாலை அமைக்க வைப்புத் தொகையை க்ஷயமே ழுரயசயவேநந-ல் கொடுத்தால் போதுமென்று உலக வங்கி ஒரு நிபந்தனையிட்டார்கள். ஆனால், அதன்பிறகு, திடீரென, உலக வங்கி அரசுக்கு கடன் கொடுக்கும் பட்சத்தில், சாலை அமைக்க வைப்புத் தொகைக்கு க்ஷயமே ழுரயசயவேநந-க்கு பதிலாக ஆன்-லைனில் பணம் கட்ட வேண்டுமென்று ஒரு சட்டத்தைப் இயற்றி உத்தரவிட்டார்கள். அப்போதுதான், இவர்கள் உறவினர் என்று சொல்லக்கூடியவர் ஆன்-லைன் டெண்டரில் கலந்துகொண்டு, ஆன்-லைனிலேயே பணமும் கட்டியுள்ளார். அது எனக்குத் தெரியாது. இது யாருக்கும் தெரியாது. டெண்டர் போட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். டெண்டரை டியீநn செய்யும்போதுதான் தெரியும். இதில் எப்படி ஊழல்?
அதேபோல, அனைத்து மாநிலங்களிலும்,  அனைத்து ஒப்பந்ததாரர்களும் நாங்கள் நுஆனு கட்ட முடியாது, பணமாகக் கட்ட முடியாது, ஏனென்றால் 
ரூபாய் 1,000 கோடி, ரூபாய் 500 கோடி என வரும்போது நாங்கள் அதிகமாக வைப்புத் தொகை கட்ட வேண்டி வரும். எனவே, க்ஷயமே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தவுடன் மீண்டும் உலக வங்கி வைப்புத் தொகைக்கு  போதுமென்று சொல்லிவிட்டார்கள். இந்த ஒரு டெண்டரில்தான் ஆன்-லைனில் பணம் கட்டியுள்ளனர். ஊழல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. உச்சநீதிமன்றம் சென்றபோது, உச்சநீதிமன்றம் அரசியலுக்காக போடப்பட்ட வழக்கு என்று நிறுத்தி வைத்துவிட்டார்கள். இதுதான் நடந்தது.
இவர்கள் செய்த ஊழலை கையில் வைத்துள்ளோம், அம்பலத்திற்கு வரப்போகிறது. சந்தர்ப்பம் வரும்போது செய்ய வேண்டும், அவசரப்படக்கூடாது. எந்தக் காலகட்டத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அப்போது செய்ய வேண்டும். இதில், யாரேல்லாம் ஒப்பந்தம் எடுத்தார்களோ, அவர்களெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகக் காலத்தில் ஒப்பந்தம் எடுத்து செய்து கொண்டிருந்தவர்கள்.
கேள்வி: அதிமுக பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறதா? இல்லை பா.ஜ.க.....
பதில்: அவரே மறுத்துப் பேசிவிட்டாரல்லவா? வரவேற்றுள்ளாரே? அதுதான் கூட்டணி.
கேள்வி: அரிசி வழங்கி இருப்பதில் ரூபாய் 450 கோடி...
பதில்: அது தவறானது. இழப்பு ஏற்பட்டதென்று சொல்கிறார். எப்படி இழப்பு ஏற்பட்டது. தெளிவாகச் சொல்ல வேண்டும். மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்களே தெரிவிப்பார்.
உணவுத் துறை அமைச்சர்: மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்கள் தெளிவான விளக்கத்தை சொல்லியிருக்கிறார்கள். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் நடைபெறும் ஆட்சிக்கு பெயரும், புகழுமாக இருப்பதை எப்படியாவது கெடுக்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் தவறான புகார்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தவறான செய்திகளை தினந்தோறும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கொரோனா காலத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 1 நபருக்கு 5 கிலோ கூடுதலாக வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவானது, அந்தியோதயா அன்னயோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் அதேபோல, முன்னுரிமை அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்தது. அதற்காக 13.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ஒதுக்குகிறார்கள். அது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 
1 நபருக்கு 5 கிலோ வழங்கப்பட்டுள்ளது. இது சநஉடிசன. இதனை, எப்போது, எங்கு, யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அம்மா வழியில், தாயுள்ளத்தோடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, அனைவருக்கும் அரிசி கொடுக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றொரு தரப்பினருக்கு கொடுக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக அரசின் சொந்த நிதியிலிருந்து, அவர் இந்தப் பயன் மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற உணர்வோடு, நவம்பர் மாதம் வரை, ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி கூடுதலாக கொடுக்க வேண்டுமென்பதற்காக ரூபாய் 1351.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கு 6.05 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி வாங்கி அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மை, அவர்கள் தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்: அதாவது வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறு செய்தியை, பொய்யான செய்தியை வெளியிட்டு , மலிவான விளம்பரத்தைத் தேடுகிறார்கள். எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இது கைவந்த கலைதானே. வேறு எந்தக் குற்றச்சாட்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. எல்லாம் ஆதாரத்துடன் இருக்கிறது. எத்தனை முன்னாள் மந்திரிகள் மீது வழக்குகள் இருக்கிறது என்று தெரியுமா? அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  இவற்றையெல்லாம் மறைப்பதற்குத்தான் அமைச்சர்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை இன்றைக்கு கொண்டுபோய் அறிக்கை மூலமாக மாண்புமிகு  ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், ஏற்கனவே மாண்புமிகு அம்மா இருக்கும்போது திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகளெல்லாம் விரைவாக நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது. அப்படி வருகின்றபோது இவர்கள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவேண்டிய நிலை இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்துவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, ஒரு பொய்யான அறிக்கையை உருவாக்கி, எங்களது அரசின் மீது களங்கம் சுமத்துவது,  அவதூறு செய்தி வெளியிடுவது, மக்களிடத்தில் 
குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான் இவ்வாறு செய்கிறார். 
திரு. ஐ.பெரியசாமி அவர்கள் மீது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக 
9 வழக்குகள் இருக்கின்றன. திரு. சுப தங்கவேலன் அவர்கள் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு, திரு.கே.என்.நேரு அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் இருக்கிறார், அவர்களெல்லாம் சீக்கிரம் போய்விடுவார்கள், கவலைப்படாதீர்கள். அவர்களெல்லாம் அடுத்த தேர்தலில் இருப்பார்களா, இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கின்றது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வானூர் எஸ்.ஆறுமுகம்,  என்.பெரியசாமி  ஆகியோர்  மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, அசோகன், முன்னாள் அரசுப் பணியாளர் கையூட்டு பெற்ற வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு.அன்பரசன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு.கே.எஸ்.ராஜன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, திரு.என்.கே.பி.ராஜா அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திருமதி தமிழரசி மீது சொத்துக் குவிப்பு வழக்கு, திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் மீது  சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எல்.பி.தர்மலிங்கம் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.ராஜு அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு.கண்ணப்பன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கு, முன்னாள் மதுரை மேயர் 
திரு. குழந்தைவேலு அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாரிமுத்து அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, மதுரை முன்னாள் மேயர் திரு. எம்.பாண்டியன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஞானசேகரன் அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. 
இவ்வளவையும் வைத்துக்கொண்டு, அண்ணா திமுக மீது ஊழல் என்கிறார். எந்த அ.இ. அண்ணா திமுக-வினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, சொல்லுங்கள். திமுக-வினரில் இவ்வளவு பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது, விசாரணைக்கு வரவிருக்கின்றது. 
கேள்வி: அதிமுக அரசு தான் இருக்கிறது, துரிதப்படுத்தியிருக்கலாமே? 
பதில்: முறையாகத் தான் வரமுடியும். நாம் ஒவ்வொரு முறையும் எடுத்துச் சொல்கிறோம். நீதிபதிகள் வாய்தா கொடுக்கிறார்கள். இப்போது உச்சநீதிமன்றமே முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி, இப்போது இருக்கும் எம்.எல்.ஏ.,  எம்.பி., அமைச்சர்களை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமே அமைத்து விட்டார்கள்.  இந்த வழக்குகளையெல்லாம் அதற்கு அனுப்பியிருக்கிறார்கள், விரைவாக வரும். அதனால்தான், இவர் முந்திக் கொண்டார். வழக்கு வந்தால் தினந்தோறும் அத்தனைபேரும் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வந்தால் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி அதை காட்டிக் கொண்டிருப்பீர்கள். இதை மறைப்பதற்காக, அண்ணா திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தவேண்டுமென்று, ஒரு பொய்யான அறிக்கையை தயார் செய்து கொடுத்திருக்கிறார். 
கேள்வி: 200 சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின்  ...
பதில்: அவர் என்ன 300 கூட வைத்துக் கொள்ளலாம், ஓட்டு போடுவது மக்கள்தானே, அதை மறந்து விட்டாரே.  நாங்கள் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர் வீட்டு மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர், தன் பையன் வரவேண்டுமென்றுதான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்கள் வரவேண்டுமென்றெல்லாம் பாடுபடவில்லை.  திரு.கலைஞர் அவர்கள் இருக்கும்போது ஸ்டாலின் வரவேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது திரு.ஸ்டாலின், தன் மகன் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வோம், நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று கடுகளவு கூட எண்ணம் கிடையாது. தன் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும், குடும்பத்திற்கு என்னென்ன பதவி கிடைக்க வேண்டும், என்னென்ன அதிகாரத்தில் வர வேண்டுமென்றுதான் இருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் கனிமொழி ஒரு பக்கம் சுற்றுகிறார், தயாநிதி மாறன் ஒரு பக்கம் சுற்றுகிறார், அந்தக் கட்சியில் வேறு ஆளே கிடையாதா?  அண்ணா திமுக-வில் நான் பேட்டி கொடுக்கும்போது, எங்களுடைய அமைச்சரை நான் பதில் சொல்லச் சொல்கிறேன், அவர் பதில் சொல்கிறார்.  திமுக-வில் இதுபோன்று சொல்ல முடியுமா? அவர் மட்டுமல்ல, கூட்டணி கட்சியினரே வாய் பேச பயந்து கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி அப்படியல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கின்றது, அந்தக் கொள்கையின்படி அந்தக் கட்சி நடக்கும். அப்போதுதான் அந்தந்த கட்சியை வளர்க்க முடியும். அப்படி எங்கள் கட்சியிலுள்ள கூட்டணிகளெல்லாம் சுயமாக செயல்படுகிறார்கள். ஆனால், அவர் கட்சியிலுள்ள கூட்டணியெல்லாம் பயந்துபோய், அவர் என்ன சொல்கிறாரோ, அதற்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
கேள்வி: அதிமுக கூட்டணி தொடருமா...
பதில்: அடிக்கடி எல்லா பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் சொல்கிறோம், எங்களுடைய கூட்டணி தொடர்கிறது.
கேள்வி: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் மீண்டும் கொரோனா தொற்று பரவுவது குறித்து...
பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களை எல்லாம் முழுமையாக பரிசோதனை செய்து தான் அனுமதிக்கிறோம். இன்றுகூட பரிசோதனையில் தொற்றுள்ளவரை கண்டுபிடித்திருக்கிறோம். உடனடியாக ணுரயசயவேiநே செய்திருக்கிறோம். ஆகவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியம். இதை நாட்டு மக்கள் உணர வேண்டும். வளர்ந்து வந்த நாடுகளிலேயே இதை சரியான முறையில், அதாவது அரசு சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொடங்கியிருக்கிறது. நமது பகுதியில் யாருமே முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணிவது மிக மிக முக்கியம் என்று நாங்களும் பலமுறை சொல்லிக் கொண்டேயிருக்கிறோம்.  கொரோனா வைரஸ் நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடியது. இதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஒட்டுமொத்த மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென்று கேட்டு விடைபெறுகின்றேன்.