ரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன?

 

ரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன?

இந்த இருவரும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களாகவும், அவரது அரசியல் ஆர்வத்துக்கு உரமிட்டு பல ஆண்டுகளாக ஆலோசனைகளை வழங்கி வந்தவர்களாகவும் அறியப்படுகின்றனர்.

இதில் தமிழருவி மணியன், தமிழகத்தில் காமராஜ் ஆட்சிக்காலம் தொட்டு அரசியல் துறையிலும் இலக்கிய உலகிலும் பிரபலமானவர். மாணவர் பருவத்தில் காமராஜின் அரசியலால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த தமிழருவி மணியனின் இயற்பெயர் தெய்வசிகாமணி. இவர், தமிழ் சொற்களைப் பயன்படுத்தி ஆற்றும் மேடை உரையை பார்த்து வியந்த காமராஜ், இவரை "தமிழருவி" என அழைத்தார். அதுவே பின்னாளில் "தமிழருவி மணியன்" இவர் அழைக்க காரணமாகி அதையே தனது அதிகாரப்பூர்வ பெயராகவும் அரசிதழில் பதிவு செய்து கொண்டார் அவர்.

வரலாற்றில் முதுகலை பட்டமும் சட்டப்படிப்பும் முடித்த தமிழருவி மணியன், சில ஆண்டுகள் வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து யூனியன் உயர்நிலைப்பள்ளியில் வரலாற்றுப்பள்ளி ஆசிரியராக தமிழருவி மணியன் பணியாற்றினார்.

பள்ளிப் பணிக்கு இடையே தொடர்ந்த இவரது அரசியல் வாழ்க்கை, காமராஜ் அங்கம் வகித்த இந்திய தேசிய காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இருந்தது.

காமராஜர் மறைவுக்குப் பிறகு அவர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பிறகு அந்த கட்சியில் இருந்தவர்கள், கர்நாடகா முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் ஜனதா தளமாக பிரிந்து சென்றபோது அதில் தமிழருவி மணியன் ஐக்கியமானார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கியபோது அதன் தமிழ்நாடு தலைவராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார்.

1996இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மூப்பனார் தொடங்கிய பிறகு ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இருந்த தலைவர்களுக்கு மூப்பனார் அழைப்பு விடுத்தார். மூப்பனாரின் நேரடி அழைப்பை ஏற்று தமது தலைமையிலான லோக் சக்தி கட்சியினருடன் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார் தமிழருவி மணியன்.

காமராஜ் பற்றாளர்

இந்த நிலையில், ஒரு கட்டத்தில் காங்கிரஸுடன் தமாகா இணைந்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக அவர் பணியாற்றினார்.

2009ம் ஆண்டு இலங்கை பிரச்னையின்போது காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாட்டைக் கண்டித்து அக்கட்சியில் இருந்து வெளியேறிய தமிழருவி மணியன், பிறகு காந்திய இயக்கம் என்ற அரசியல் சாரா அமைப்பை தொடங்கினார். பிறகு அதை அரசியல் கட்சியாக பதிவு செய்து காந்திய சிந்தனையாளர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ரஜினியின் அரசியல் ஆர்வத்துக்கு உரமிட்டவர்களில் முக்கியமானவராக கருதப்படும் இவர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் மறைந்த சோ ராமசாமி, தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோருக்கும் நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல தலைவர்களை சந்தித்து அணி சேர்க்க முயன்றார். 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியை உருவாக்க அவர் முயற்சி எடுத்தார். அதற்கு மக்கள் நல கூட்டணி என பெயர் வைக்கப்பட்டது. அந்த அணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. ஆனால், அந்த அணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் திமுக - அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அரசியல் அணி ஏற்பட வேண்டும் என்ற தமிழருவி மணியனின் உந்துதல், அத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் ரஜினியின் சிந்தனையுடன் ஒத்துப்போனதால், இந்த இருவருக்கும் பொதுவான கருத்தொற்றுமை காணப்படுகிறது.

பிபிசி

அர்ஜுனமூர்த்தி யார்?

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் அர்ஜுனமூரத்தி. இந்த அறிவிப்பை ரஜினி வியாழக்கிழமை வெளியிடும்வரை அவர் பாஜகவின் தமிழக அறிவாற்றல் பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார்.

ஆனால், ரஜினி அவரது கட்சியில் தன்னை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்த சில நிமிடங்களில் பாஜகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் அனுப்பிய கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக பாஜக தமிழக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பிறகு தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைல் குறிப்பில், "இப்போது தலைவருடன்" என்ற வார்த்தைகளை அவர் கூடுதலாக சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். இதனால் திமுகவில் ஆரம்ப கால அரசியல் தொடர்புடன் இருந்த அவர், முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், திமுகவில் இருந்து விலகிய அவர் 2019ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர், தொடக்கத்தில் பாஜக வர்த்தக அணியில் இருந்தார். பின்னர் அவர் அக்கட்சியின் அறிவாற்றல் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 

Facebook பதிவின் முடிவு, 1பணமதிப்பிழப்பு, பணமில்லா பரிவர்த்தனை போன்ற திட்டங்களுக்கான ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார். YELDI Softcom என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வரும் அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்தின் ட்விட்டர் பக்கம் மற்றும் அவர் தொடர்புடைய தொழில்நுட்ப விவகாரங்களை கவனித்து வருகிறார். அந்த வகையில், இவரது தொழில்முறை அணியில் இருப்பவர்கள்தான் ரஜினிகாந்தின் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களையும் கவனித்து வருவதாக அறிய முடிகிறது.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்