பெரியகுளத்தில் இலவச பொது மருத்துவ முகாம்..

பெரியகுளத்தில் இலவச பொது மருத்துவ முகாம்.. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பங்கு மக்கள், புனித வின்சென்ட்  தே பவுல்சபை மற்றும் தேனிவைகை ஸ்கேன் இணைந்து நடத்திய  இலவச பொது மருத்துவ முகாம்......

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கத்தோலிக்க கிறித்துவ நலச் சங்கம் ஏற்படு செய்த "பெரியகுளம் பங்கு மக்கள், புனிதவின்சென்ட் தே பவுல் சபை மற்றும் தேனி வைகை ஸ்கேன் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் வே.பாப்புராஜ் பங்குத்தந்தை, எப்.ஜான் பால் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.....

இந்த மருத்துவ முகாமை டாக்டர்.T.பாண்டியராஜ்  துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை, மற்றும் காய்ச்சல் - இதர நோய்களுக்கான மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்

இந்த நிகழ்ச்சியில் . டெய்லர் பாஸ்டின் .திராவிடர் கழக நிர்வாகி அன்புக்கரசன் சமுக ஆர்வலர் இனியன் கடுங்கோன். ஜெஸ்டர்பால். ஆரோக்கியம் . பிரான்ஸிஸ். ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். விசிகசார்பில் நாகரத்தினம், ஆண்டி, சிவநேசன், ஜோதிமுருகன், மணிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்

தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி