புயல் பாதிப்பை பார்வையிடச்சென்ற வழியில் ஆசிர்வாதம் கேட்ட மணமக்களை உடனடியாக காரைவிட்டு கீழே இறங்கி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்தினார்.
தமிழகம் மற்றும் புதுவையை புரட்டி எடுத்த நிவர் புயல் பெரும் கடும் சேதங்களை ஏற்படுத்திய நிலையில் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் கடலூர் மாவட்டம் சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்தார். அப்போது திடீரென இன்று திருமணம் செய்து கொண்ட மணமக்கள் முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற விரும்பினார்கள். இதனை அடுத்து அவர்களை அருகில் அழைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மனதார வாழ்த்தினார்.
இன்று திருமணம் முடிந்த மணமக்கள் முதலமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்ற போது தனது காலில் இருந்த செருப்பை கழட்டி விட்டு வெறுங்காலுடன் நின்று ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது