நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்

 நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்  மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த்  நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் திடீரென நாளை தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என கூறப்படும் நிலையில் அது தொடர்பான அறிவிப்பு இந்த கூட்டத்துக்கு பின் வெளியாகலாம். அல்லது புதிய திருப்பமாக அரசியல் கட்சியை ஒருவழியாக தொடங்கும் முடிவை ரஜினிகாந்த் அறிவிக்கலாம். இதனால் தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் ஆலோசனைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.

கொரோனா பரவலுக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் முதலாவது பொது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.