வாழ்க்கைக்கு உதவும் காமராஜர் பொன் மொழிகள்

வாழ்க்கைக்கு உதவும் காமராஜர் பொன்மொழிகள்  


சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான் பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநயகந்தான்.

பிறர் உழைப்பைத் தன் சுயலத்துக்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.

படித்த சாதி, படிக்காத சாதி.. என்றொரு சாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உன் பிள்ளை ஊனமாய்ப் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக்காதே.

சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவோ ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.

எல்லாம் போய்விட்டாலும் வெல்லமுடியாத உள்ளமிருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல.. ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்.

நூறு அறிவாளிகளுடன் மோதுவது மிகச் சிரமமானது.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாகச் சொல்ல முடியாது.

நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்காத மனிதன், பிணத்துக்குச் சமமாவான்.

லட்சியத்தை அடைய அமைதியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

சில சமயம், முட்டாளாய்க் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.