ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

 ஓசூர்  மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

ஓசூர் மாநகராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர், மின் இணைப்பு, சாலை வசதி, சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் லட்சக்கணக்கான ரூபாய்களை சொத்து வரியாகஅபராதம் மற்றும் வட்டியுடன்  வசூலித்தல்... அல்லாத குப்பைக்கு குப்பை வரி வசூலிக்கும் ஒரு மோசமான மாநகராட்சியாக ஓசூர் மாநகராட்சி விளங்குகிறது. எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம், கமிஷன்,

கலெக்க்ஷன்,கரெப்க்ஷன் என மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஓசூர் மாநகராட்சி.....

கடைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்,  தனியார் பள்ளிகளுக்கும் 

சீல் வைத்தல் போன்ற அத்துமீரல்களை தடுத்து நிறுத்தக் கோரி....

 பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி ....

* ஓசூர் மாநகர அனைத்து வணிகர் சங்கங்கள், வியாபார நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம்,வீடு குடியிருப்போர் சங்கங்கள், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்*  என அனைவரும் இணைந்து *மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற *19.02.2025 புதன்கிழமை காலை சரியாக 11 மணிக்கு ஓசூர் ராயக்கோட்டை சாலை மின்சார வாரிய அலுவலகம்* முன்பு நடைபெறும். 

அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

வழக்கறிஞர். கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்