தோல்வி பயத்தில், மு க ஸ்டாலின் பிதற்றுகிறார் - ஓசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விமர்சனம்.

 தோல்வி பயத்தில், மு க ஸ்டாலின் பிதற்றுகிறார் - ஓசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விமர்சனம்.

அவதூறு பரப்புவதாக கூறி அவரை அவரே ஏமாற்றிக்கொண்டு, தேர்தல் ஜுரம் வந்துவிட்டது இதனால் தோல்வி பயத்தில், மு க ஸ்டாலின் பிதற்றுகிறார் - ஓசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விமர்சனம்.

 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஓசூர் தனியார் மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக   செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வரவேற்புரை ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜி, இறுதியாக நன்றியுரை வட்டக் கழக செயலாளர்  R.ஹேமகுமார். என்கின்ற கும்மி,

இந்த கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பங்கேற்று, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஈடுபடுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். 

இதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 

வெற்று வாக்குறுதிகளை கொடுத்து எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை பாழாக்கி உள்ளத்துடன், அவதூறு பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார் என்றும் இது ஒருபோதும் நிறைவேறாது தொடர்ந்து திமுக ஆட்சியை அமையும் என்றும் அண்மையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

அவர், வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் என்று சொல்லுவது அவரை அவரே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 

மனசாட்சியுடன் அவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என நினைத்துப் பார்த்தால் இவ்வாறு அவர் சொல்ல மாட்டார். 

அவருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. இதனால் தோல்வி பயம் வந்த காரணத்தினால் தான் தன்னை அறியாமலேயே 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிதற்றிக் கொண்டிருக்கிறார். 

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதால்,  பயத்தின் காரணமாக அவதூறு என ஸ்டாலின் குறிப்பிடுகிறார். 

எனவே அது அவதூறு அல்ல உண்மையை நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்... என அவர் பதிலளித்தார்.

 நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட இணை செயலாளர் அலமேலு, ஓசூர் மேற்கு பகுதி செயலாளர் மஞ்சு, ஓசூர் தெற்கு பகுதி செயலாளர் அசோகா ரெட்டி, இளைஞர் இளம் பெண்கள் மாவட்ட செயலாளர் ராமு, ஓசூர் ஒன்றிய கழக செயலாளர்கள் ,ஹரிஸ் ரெட்டி,ரவிக்குமார், வேப்பனஹள்ளி  தொகுதி ஒன்றிய கழக செயலாளர்கள்  பாபு வெங்கடாசலம், செல்வம்,மாதேஷ், பாலசுப்பிரமணியம் , சைலேஷ் கிருஷ்ணன்,ராமமூர்த்தி முருகன், ஜெயபால், பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜே பி என்கின்ற  ஜெய் பிரகாஷ், தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளஞ்சூரியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், தேன்கனிக்கோட்டை முன்னாள் கவுன்சிலர் பழனி சாமி,பாசறை மாவட்ட இணை செயலாளர் லோகேஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஆதி வெங்கடாசலம்,ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கின்ற சங்கர்,சிவராமன், தில்சத் ரகுமான், கலாவதி சந்திரன், ஓசூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாராயண ரெட்டி சுரேஷ் பாபு, நந்தகுமார், பேரவை மாவட்ட தலைவர் கபடி என் குமார்,பாசறை ஒன்றிய செயலாளர் மஞ்சு, வட்டக் கழக செயலாளர்கள்  ஹரிபிரசாத், கோபால ராமச்சந்திரன்,சீனிவாசன் , சூடப்பா, கமர்சியல் சின்னப்பா, சிவலிங்கம்,சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ், ஜெயக்குமார் ரெட்டி, தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி,ஒன்றிய துணை செயலாளர் நவீன்,பேரவை  ஒன்றிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மாவட்ட பிரதிநிதி அச்சு என்கின்ற லட்சுமணன், பேரவை ஒன்றே செயலாளர் கோவர்தன்,முன்னாள் கவுன்சிலர் ரங்கநாத்,தொழில் சங்க ஒன்றிய செயலாளர் ரமேஷ், கழக நிர்வாகிகள் 14 வது வார்டு மனோ, சாமிநாதன், சந்தோஷ், மாதையன், சதாம்,நந்தினி, மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சார்பான அணி மாவட்ட நகர கிளைக் கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் என கலந்து கொண்டனர்,.

B.S. Prakash 

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்