அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.*

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு   மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில்தலைமை மருத்துவமனை மருத்துவகல்லூரி முன்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினார்கள்.

மேலும் இது போன்ற அசம்பாவிதங்களுக்கு மருத்துவர்களின் பற்றாக்குறையே காரணம் என்பதால் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பொழுது கோரிக்கை விடுத்தனர்.

*K. Moorthy, கிருஷ்ணகிரி மாவட்டம்*

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்