சின்னமேலுப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

 சின்னமேலுப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமேலுப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ஏராளமான கிராம மக்கள் கலந்துக்கொண்டு நூறு நாள்வேலை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கள் கொடுத்தனார் .

கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமேலுபள்ளி கிராமத்தில் வெங்கடாபுரம், கல்லகுறுக்கி, நாரலப்பள்ளி, பெரிய கோட்டப்பள்ளிஆகிய நான்குஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன் பெறும் வகையில்

சின்ன மேலுப்பள்ளி கிராமத்தில்மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது,

ஊராட்சி மன்றத் தலைவர்களான ராஜா, திருமதி யசோதா பூங்காவனம், திருமதி சாந்தினி உமாபதி,ஷீரோதீன் ஆகியோர்

தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமினை வருவாய் கோட்டாச்சியர் பாபு, வட்டாச்சியர் பென்னாளா ஆகியோர் கலந்துக்கொண்டு முகாமினை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு முறையாக கனிணி மூலம் பதிவு செய்தனர்.

மேலும் இந்த சிறப்பு முகாமில் வருவாய்துறை, வேளாண்மை துறை, கல்வித்துறை, காவல் துறைஉள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் முகாமிட்டு துறைவாரியாக பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, நூறு நாள் வேலை முறையாக வழங்க வேண்டும்,

கலைஞரின் கனவுத்திட்டத்தின்கீழ் 

இலவச வீடு, முதியோர் உதவித்தொகை, 

இலவச வீட்டுமனை,

இலவச வீட்டு மனைபட்டா, 

பட்டா மாறுதல், 

குடும்பஅட்டை, ,

வட்டி இல்லா கல்விக்கடன், 

சாதி சான்றிதழ்,வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு

கோரிக்கை அடங்கிய மனுக்களை  பெற்று துறைவாரியாக கணினியில் பதிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு முகாமின் போது திமுக ஒன்றிய செயலாளர்களான கோவிந்தன், தனசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்களான சிவபிரகாஷ், திருமதி செல்லக்கண்ணாள், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி கவிதா பிராபகரன்,

வருவாய் அலுவலர்.குமரேசன்  உள்ளிட்ட பலர் இந்த முகாமில் கலந்துக் கொண்டனர்கள்.

K. Moorthy Krishnagiri Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்