கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

 கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் - 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடபட்டது. கிருஷ்ணகிரியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரயு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வேனில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், மாவட்ட போலீசார், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

 இதன் பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வென் புறாக்களையும், வண்ண பலூன்களையும்  பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர், தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தோட்டக்கலை, வேளாண்மை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். பின்னர் கடந்தாண்டில் சிறப்பாக பணியாற்றிய  அனைத்து துறைகளின் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டது. பின்னர் பள்ளி மாணவர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

K. Moorthy Krishnagiri Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்