தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்
05.07.2024 இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை பொதுக்கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் V.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் G.முருகன், மாநிலத் துணைத் தலைவர் N.மாரி, மாநில பொருளாளர் G.சதீஷ் , மாநில அமைப்புத் தலைவர் கோட்டை பழனி , மாநில அமைப்புச் செயலாளர் ஆசனூர் ரவி, மாநில சிறப்பு தலைவர் R. துரைசாமி , மாநில கௌரவ தலைவர் K.விஜியகுமார் , மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன், மாநில பேச்சாளர் S.சௌந்தராஜன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு மோட்சம் மற்றும் பொருளாளர் சோழ பாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் K.A.மணிகண்டன் , ஐயப்பன் கல்வராயன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகிக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் வாணியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு S.மதிவாணன் s/o செல்வதுரை அவர்களை மாநிலத் தலைவராக நியமித்து மாநிலத் தலைவர் V.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பதவி இடமாற்றம் செய்து தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.