ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்.....! EMIS இணையதளத்தில் புதிய மாற்றங்கள்....!!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்.....! EMIS இணையதளத்தில் புதிய மாற்றங்கள்....!!

 தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்கான நலத்திட்டங்கள் போன்றவற்றை வழங்குவதில் பள்ளிக்கல்வித்துறை முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதில் ஒருபகுதியாக, தமிழகத்தில் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு "எமிஸ்" (EMIS) ஐ.டி., கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.. பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளம் வாயிலாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி, அரசின் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஐ.டி.,களில்தான், மாணவர்களின் பெற்றோர் செல்போன் நம்பரும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.. இந்த எண்ணிற்கு மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு, தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகிறது.

எமிஸ் எண்களை கொண்டே ஒரு மாணவர் எந்தெந்த பள்ளிக்கு மாறி இருக்கிறார், எங்கெங்கே படித்திருக்கிறார் என்ற முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.. முழுக்க முழுக்க கல்வித்துறை நிர்வாகம் சார்ந்து மட்டுமே இந்த எண் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த ஐ.டி.,களில்தான், மாணவர்களின் பெற்றோர் செல்போன் நம்பரும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.. இந்த எண்ணிற்கு மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு, தேர்வு முடிவுகள் அனப்பப்பட்டு வருகிறது.

ஆனால் பல மாணவர்கள் தங்கள் பெற்றோரின் செல்போனை நம்பரை தராமல், வேறு நபர்களின் செல்போன் நம்பர்களை கொடுத்துவிட்டார்களாம்.. இது கடந்த வாரம்தான் கண்டறியப்பட்டுள்ளது.. அதனால், இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்தவுடனேயே, மாணவர்களின் பெற்றோர் செல்போன் நம்பர்களை சரிபார்த்து அதனை எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் கல்வித்தரம், பள்ளிக்கு வராமல் இருந்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பது சுலபமாக இருக்கும் என்றும், பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்ப, சான்றிதழ் வழங்கும் தேதி பற்றி தெரிவிக்க எளிதாக இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

அதன்படி இதற்கான பணிகளும் தற்போது ஆரம்பமாகி உள்ளன.. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் விதமாக தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை "டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்" என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த போகிறதாம்.

இதுவரை எமிஸ் தளத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர்களின் செல்போன் நம்பர்கள், சுமார் 1 கோடியே 16 லட்சம் செல்போன் எண்கள் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள செல்போன் நம்பர்கள் உபயோகத்தில் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை கண்டறிவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.

சிக்கல்கள்: இதனை சரிசெய்யும் விதமாக, செல்போன் எண் சரிபார்க்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 5 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டிருக்கிறதாம்..

100 சதவீதம் பணிகளும் முடிந்தவுடன், பள்ளிக்கல்வித்துறைக்கும், பெற்றோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை "டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்" என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளதாம்.. இந்த தளத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பள்ளி கல்வித்துறை செய்துள்ளதாகவும், அது தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..

அதாவது, இந்த புதிய தளத்தில், ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. வருகிற 25-ம் தேதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடப்பதாக என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.