பள்ளிகளை திறப்பதற்கு ஏன் இவ்வளவு கஷ்டம்...?!

 பள்ளிகளை திறப்பதற்கு ஏன் இவ்வளவு கஷ்டம்...?!

தமிழகத்தில் முன்பெல்லாம் புதிய கல்வியாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆரம்பமாகி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் கடும் கோடை வெப்பம் மற்றும் சில சமூக (விரோத) அமைப்புகளின் கோரிக்கையால் பள்ளிகள் திறப்பது சற்று தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி முதல் துவங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும், ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாலும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன்4 ஆம் தேதி வெளியிடப்படுவதாலும் 6ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.

தற்போது பள்ளிகள் திறப்பை மேலும் சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் ஜூன் 6ஆம் தேதி வியாழன் கிழமை பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளி இயங்கும் அடுத்து சனி ஞாயிறு விடுமுறை வருவதால், ஜூன் 10ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி யார்  தெரிவிக்கிறார்கள் என்கிற செய்தியும் போட்டால்  அவர்களை நன்றாக நான்கு கேள்விகள் கேட்கலாம்.....?!

சனி ஞாயிறு எப்போது வராமல் இருக்கிறது வாராவாரம் வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது.  அதற்காக வருடம் முழுதும் விடுமுறை விட முடியுமா...?

 பள்ளிகள் திறப்பதற்கு மட்டும் ஏன் இப்படி அமாவாசை பௌர்ணமியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த முட்டாள்கள்..... 

 அதையும்  சிலர் செய்தியாக வெளியிடுகிறார்கள்.  என்ன அயோக்கியத்தனம் இது...?

  ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்  என்கிற பழமொழி எல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கிறது.

 பள்ளியை திறந்து ஒழுங்காக பாடம் நடத்துவதற்கு இவ்வளவு அக்கப்போரா...?

 தமிழகத்தில் மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறது...?!