எச்சரிக்கை🚫🚫
அனைவருக்கும் வணக்கம்
உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொடரும் முறைகேடுகள்........
ஆதனூர் கிளாப் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமி சுப்பிரமணியம் என்பவரது வங்கி கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அவர் இல்லாமலேயே எடுக்கப்பட்டது இதனை வங்கியில் சென்று கேட்டபோது முறையான பதில் ஏதும் கொடுக்கவில்லை ஏடிஎம் சார்ஜ் மற்றும் இதர தொகை பிடித்தம் என்று மழுப்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது வாடிக்கையாளர் மீண்டும் மீண்டும் பணம் யாரால் எடுக்கப்பட்டது என்று கேட்டபோது வங்கியின் கணக்கில் அதே தொகையை செலுத்தி விட்டு அதனை மைனஸ் (-) தொகையில் காட்டியுள்ளனர் ஆனால் பணம் எப்படி எடுக்கப்பட்டது யார் எடுத்தார் என்ற கேள்விகளை கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை பணத்தை எடுக்கும்போது வாடிக்கையாளரின் முகம் மற்றும் அவரின் கையெழுத்தை சரிபார்த்து தான் பணம் கொடுக்கப்படும் ஆனால் வங்கி வாடிக்கையாளர் இல்லாமலேயே பணம் எடுக்கப்படுகிறது. என்று கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை..... இப்படி உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நீண்ட நாள் பராமரிப்பு இல்லாத வங்கி கணக்குகளின் மீது முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது இது தடுக்க உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.