விண்ணப்பித்து காத்திருக்கக் கூடிய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உடனடியாக அங்கீகாரம் வழங்கு.....! தனியார் பள்ளிகள் போர்க்கொடி...!?

விண்ணப்பித்து காத்திருக்கக் கூடிய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உடனடியாக  அங்கீகாரம் வழங்கு.....! தனியார் பள்ளிகள் போர்க்கொடி...!?

அங்கீகாரம் வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்து அடித்து விட்டு தனியார் பள்ளிகளை மிரட்டும் வகையில் ஒரு லட்சம் அபராதம் என்று சோ காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ள மாவட்ட கல்வி அலுவலர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..

தமிழகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடித்து விட்டு தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதற்காகவே ஒரு வார காலத்திற்குள் அங்கீகாரம் வாங்க வேண்டும் இல்லை என்றால் ஒரு லட்சம் அபராதம் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் அபராதம் என்று தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது....

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்கனவே அங்கீகாரம் பெற்று நடைமுறையில் இருந்து வரும் பள்ளிகளுக்கும் புதிது புதிதாக உத்தரவுகளை போட்டு தனியார் பள்ளிகளை நசுக்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்தால் ஓர் ஆண்டு மட்டும் அங்கீகாரம் தருவதும் ....அதுவும் முடிந்து போன காலத்திற்கு அங்கீகாரம் தருவதும்.... அந்த முடிந்து போன காலத்திற்கான அங்கீகார ஆணைக்கே பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதும் கோப்புகளை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்புவதற்கே லஞ்சம்... ஆய்வு மேற்கொள்வதற்கு லஞ்சம்.. கேட்ட ஆவணங்களை திரும்பத் திரும்ப கேட்பது பள்ளி நிர்வாகிகளை அவமதிப்பது... தரக்குறைவாக பேசுவது ....

கொடி நாள் என்ற பெயரில்... ஆசிரியர் கழக நீதி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கில் வசூல் ... கட்சி நிகழ்ச்சிகள் ....அரசு நிகழ்ச்சிகளுக்கு தனியார் பள்ளி வாகனங்களை கேட்டு மிரட்டுவது... அமைச்சர் வருகிறார் இயக்குனர் வருகிறார் கூட்டம் போட வேண்டும் சாப்பாடு போட வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கில் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலிப்பது என்று ஒரு பெரிய வசூல் வேட்டை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்பொழுது எப்படியாவது தனியார் பள்ளிகளை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட 

சோ.. க்காஸ் நோட்டீஸ்களை அனுப்பி வருகிறார்கள்...

அங்கீகாரம் பெற வேண்டியது விதி என்றால் அது அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும் தானே...

எத்தனை அரசு பள்ளிகள் சுகாதாரச் சான்று தீயணைப்பு துறை தடை இன்மைச் சான்று கட்டிட உறுதிச் சான்று உரிமைச் சான்று டிடிசிபி /சிஎம்டிஏ கட்டிட அனுமதி சான்றுகள் பெற்று பள்ளிகள் நடத்துகிறார்கள். 

அங்கே படிக்கிற பிள்ளைகளும் பிள்ளைகள் அல்லவா..? 

பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு பள்ளிகளுக்கு பொருந்தாதா?

01.01.2011...க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெற வேண்டியது இல்லை எனும் உயர் நீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதற்காக பழைய பள்ளி நிர்வாகிகள் இடம் கட்டிட அனுமதி கேட்கிறீர்கள்...

நகராட்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி/ சிஎம்டிஏ அனுமதி கொடுப்ப தில்லையே? 

இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு எப்படி அங்கீகாரம் கொடுப்பீர்கள்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கொடுக்காமல் இருப்பீர்கள்?

கிராமப்புறங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு அரசாணை எண் ..76 இன் படி இலட்சக்கணக்கில் செலவு செய்து டிடிசிபி கட்டிட அனுமதி கன்கிரன்ஸ் வாங்கிய பின்னர் கிராம ஊராட்சி தலைவரிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் அங்கேயும் லட்சக்கணக்கில் பணம் கட்டு என்று மிரட்டுகிறார்கள்....

இதனால் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

அரசு திட்டமிடப்பட்ட பகுதி திட்டமிடப்படாத பகுதி என்று பிரித்து திட்டமிட படாத பகுதிக்கு மட்டும் கட்டிட அனுமதி தந்தும் திட்டமிடப்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள்  எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்க்கமான நடைமுறைக்கு ஒத்துவரும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்க எந்த வகையிலும் தனியார் பள்ளியில் படிக்கிற மாணவர்கள் பெற்றோர்கள் பாதிக்காத வகையில் நல்லதொரு முடிவெடுத்து அந்த முடிவின்படி செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் 

அதுவரை தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளை கல்வித்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளை செய்யக்கூடாது.

RTE சட்டப்படி தனியார் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படக் கூடாது என்று அரசு விதி இருந்தும் அங்கீகாரம் தர மறுக்கும் அதிகாரிகள் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது? 

அங்கீகாரமே இல்லாமல் எப்படி 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுத அனுமதித்தீர்கள்? 

பொது தேர்வு முடிவுகளை எப்படி உடனடியாக வெளியிட்டீர்கள்?

 அடுத்து வரும் கல்வி ஆண்டுக்கான  மாணவர்களை சேர்க்க எப்படி அனுமதி தந்தீர்கள்?

 பள்ளி வாகனங்கள் F.C செய்ய தொடர அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலையில் அரசு ஏன் அங்கீகாரம் தர மறுக்கிறது?

எனவே தமிழக தனியார் பள்ளிகள் இயக்குனர் அவர்கள் உடனடியாக அங்கீகாரம் வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் நர்சரி பிரைமரி மெட்ரிக் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைவருக்கும் எந்தவித நிர்ப்பந்தமும் நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள்ளாக அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகிறோம். 

இல்லையேல்.... எமது மாநில சங்கத்தின் சார்பில் வருகின்ற 12.06.2024 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகம் தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம் முன்பு அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கிட கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நடத்துவது என்று முடிவு செய்து இருக்கிறோம்... என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு தெரிவிக்கிறோம்..

நன்றியுடன்

தங்கள் உண்மையுள்ள 

கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.

10.05.2024.