10ம் தேதி Confirm: பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு..!

 10ம் தேதி Confirm: பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு..!



பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு பெற்றது. மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிந்து, விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்று விட்டது. வரும், 6ம் தேதி அரசு தேர்வு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

பிளஸ் 1க்கு விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தமும் நேற்றுடன் நிறைவு பெற்றது.

மாநிலம் முழுதும், 103 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில், மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து, மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் கணினி வழியில் மதிப்பெண் இணைப்பு பணிகள் துவங்கியுள்ளன.

அதனால், திட்ட மிட்டபடி வரும், 10ம் தேதி தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது
Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்