தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அதன் பொதுச்செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர்...
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் பெருமக்கள் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வருகின்ற 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுமைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் முழு மனதோடு ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தனித்தனியாகவோ வாட்ஸப் குழுக்கள் மூலமகவோ நேரடியாகவோ சந்தித்து பேசி மேற்கண்ட நமது குடும்பத்தாரின் ஒரு கோடி ஓட்டுக்களை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு சிந்தாமல் சிதறாமல் அனைத்து வாக்குகளையும் பெற்று தந்து....
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் வாழும் மகாத்மா மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று பாரத தேசத்தை மீண்டும் ஆள வேண்டும்....
அப்பொழுதுதான் பாரத தேசம் பாதுகாப்பாக இருக்கும்.... போரில்லா பாரதமாகவும் தெய்வபக்தியும் தேசபக்தியும் மிக்கவர்களாக நம்நாட்டை உயர்த்த முடியும்.
நம் மக்கள் அனைவரும் அச்சமின்றி நிம்மதியாக நோய் நொடி இன்றி வாழ முடியும் ...
நம் நாட்டு மக்களின்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய முடியும்.சுய சார்புடன் நமது தொழில்களை நாம் செய்து நம் சந்ததியை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும் .
நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டு பாதுகாப்போடு வாழ வேண்டும் என்றால் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி லஞ்ச லாவண்யம் இல்லாமல் நம் பாரத தேசமே ஒரே குடும்பம் என கொடிய கொரோனா தொற்று நோய் காலத்தில் 147 கோடி இந்திய மக்களை பாதுகாத்து நோய்க்கான மருந்து கண்டுபிடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கி மதவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து உலக அளவில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்திட்ட நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மூன்றாவது முறையாக மீண்டும் நல்லதொரு ஆட்சி அமைந்து உலகத்தின் விஷ்வகுருவாய் நாம் அனைவரும் உயர்ந்து ஒளி வீசிட முடியும்.
அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்பட வேண்டும் .... மும்மொழி கல்விக் கொள்கையை அமுல் படுத்திட.. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறந்திடவும்.. வேலைவாய்ப்பை பெருக்கிடவும்... செய்யும் தொழில்கள் யாவும் சிறந்திடவும்..
சட்டம் ஒழுங்கை கட்டி காப்பாற்றி போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட லஞ்சம் ஊழல் கமிஷன் கலெக்ஷன் கரெப்க்ஷன் ஒழித்து உண்மையும் நேர்மையும் ஊழலும் இல்லா புதிய பாரத திருநாட்டை படைப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றிட இன்றே சபதம் ஏற்று....
நமது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்வோம்.
காரணம்.... இன்றைய திமுக அரசுதான் ....
தரமான கல்வியை சீர்குலைக்க தனியார் பள்ளிகளுக்கு எதிராக சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது...
தனியார் பள்ளிகளுக்கு எதிராக கல்வி கட்டண நிர்ணயப் குழுவை கொண்டு வந்து நம்மை நசுக்கியது....
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு இரண்டு கழகங்களும் பல லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று தனியார் பள்ளிகளை வாட்டி வதைக்கிறது.
சிபிஎஸ்சி என்.ஓ.சி பெற 35 லட்சம் வரை லஞ்சமாக வசூலித்து தனியார் பள்ளிகளிடம் கொள்ளை அடிக்கிறார்கள்..
அங்கீகாரம் பெற தேவையான சான்றிதழ்கள் பெற லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் சுகாதாரத்துறை தீயணைப்புத் துறை வருவாய்த்துறை போக்குவரத்து துறை டி.டி.சி.பி/ சி.எம்.டி.ஏ கல்வித்துறை அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் சான்றுகள் கிடைக்கும் அவல நிலை...
இன்று வரை பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கூட வழங்கவில்லை.
RTE கல்வி கட்டணம் வழங்குவதில் வருடம் தோறும் பள்ளி நிர்வாகிகளை மாபெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்.
பள்ளி வாகனங்கள் எப்.சி செய்வதற்கு பல்லாயிரக்கணக்கில் லஞ்சம்...
தனியார் பள்ளி வாகனங்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பச் சொல்லி பள்ளி நிர்வாகிகளை மிரட்டுவது...
தனியார் பள்ளிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பது..
கொரோனா நோய் தொற்று காலத்திலும் தமிழக அரசுக்கு கருணாநிதி கோடிக்கணக்கில் தனியார் பள்ளிகள் நிதியாக கொடுத்தும் ஒருமுறை கூட பள்ளிக்கல்வி அமைச்சர் அழைத்துப் பேசாதது...
பாரத தேசமே தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறபோது தமிழக அரசு மாநில கல்வி திட்டத்தை அமல்படுத்துவோம் என வல்லுநர் குழு அமைத்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எதுவும் செய்யாமல் அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையும் பெற்றுக் கொள்ளாமல் இனிமேல் அறிக்கை வழங்கி பாடங்களை எழுதி அடுத்த ஆண்டு எவ்வாறு அமல்படுத்த முடியும்.
எனவே தமிழகத்தின் பெற்றோர்களும் மாணவர்களும் மிகவும் குழம்பி போய் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு போவதால் வசதி உள்ள பள்ளி நிர்வாகிகள் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்குவதால் நர்சரி பிரைமரி மெட்ரிக்பள்ளிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
தமிழக அரசின் நீட் தேர்வு குளறுபடிகள் மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்கி உள்ளது.
நீட் நுழைவு தேர்வே வேண்டாம் என்று சொன்னவர்கள் இன்றைக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே 150 சதவீத சொத்து வரி உயர்த்தியும், மின் கட்டணத்தை உயர்த்தியும் மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கி விட்டார்கள்.
அரசுப் பள்ளிகளுக்கு வெண்ணையும் தனியார் பள்ளிகளுக்கு சுண்ணாம்பும் தடவும் வேலையை மிகச் சரியாக செய்து வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் மிகவும் வேதனை தருவதாக உள்ளது.
அரசின் பணிச்சுமையையும் பணச்சுமையையும் குறைத்து வேலை வாய்ப்பை பெருக்கி வரி வருவாய் உருவாக்கி நாடு நலம் பெற நாளும் உழைக்கும் தனியார் பள்ளிகளை வாழ வைக்காமல் நல்வழி காட்டாமல் நசுக்கும் இந்த திராவிட மாடல் அரசுக்கு இந்த தேர்தலில் நாம் நமது ஜனநாயக கடமை ஆற்றிட அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்னால் மாணவர்களும் என ஒரு கோடி பேரை ஒருங்கிணைத்து தவறாமல் வாக்களித்து ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தாமரை, மாம்பழம், சைக்கிள், பலாப்பழம் சின்னங்களில் 100% வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
நாடும் நமதே நாற்பதும் நமதே என நாளும் உழைப்போம் வாரீர் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இருகரம் கூப்பி அனைவரையும் அழைக்கின்றேன்.
திராவிட மாடல் ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கும் நம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு பைசா கூட நன்மை இல்லை.
நாள்தோறும் தனியார் பள்ளிகளிடம் பகற் கொள்ளையடிக்கும் தமிழக அரசிடமும் பள்ளி கல்வித்துறையிடமும் இன்னும் உள்ள அனைத்து துறைகளிடமிருந்தும்நம்மையும் ....நம் சொத்துக்களையும் பாதுகாத்திட.... நம் உரிமைகளையும் மீட்டெடுத்திட...
இன்னும் இருப்பதோ ...
ஏழு நாட்கள் மட்டுமே. நொடிப்பொழுதும் ஓய்வறியாமல் உழைத்து வெற்றி வாகை சூட இப்பொழுதே உங்கள் பணியை உடனே தொடங்குங்கள்...
வெற்றி கிட்டும்வரை ஓயாது உழையுங்கள்...என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.