பர்கூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணகிரி,ஏப்.8- கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் மல்லப்பாடி, சிகரலப்பள்ளி, தபால் மேடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமம் கிராமமாக சென்று தாமரைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் சி. நரசிம்மனுக்கு தொண்டர்கள் பொன்னாடை போர்த்தி பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். சுற்றுச்சூழல் ஒன்றிய தலைவர் கணேசன், சுற்றுச்சூழல் துணைத் தலைவர் அரும்பு, ஒன்றிய பொருளாளர் சரவணன், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் திருப்பதி கிளை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
K. Moorthy Krishnagiri Reporter