தர்மபுரியில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பலமாக மோதும் பா.ம.க.....?!

தர்மபுரியில் தி.மு.க.,  அ.தி.மு.க.வுடன் பலமாக மோதும் பா.ம.க.....?!

 லோக்சபா தேர்தலில் திடீரென நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியானது தருமபுரி. பாமக தமது வேட்பாளரை மாற்றி அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணியை வேட்பாளராக அறிவித்ததால் அனைவரது கவனமும் தருமபுரி பக்கமும் திரும்பியுள்ளது.

தருமபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர். 2021 சட்டசபை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 3-ல் அதிமுக; 2-ல் பா.ம.க. வென்றது.

 தருமபுரி லோக்சபா தொகுதி எம்பியாக இருந்தவர்களில் 5 எம்பிக்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் பாமக 4 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை, அதிமுக, காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒரு முறை இத்தொகுதியில் வென்றிருக்கிறது.

தருமபுரி தொகுதியில் வன்னியர்கள் 35%; தலித்துகள் 25% ; கொங்கு கவுண்டர்கள் 15%; இதர சமூகத்தினர் 25% உள்ளனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர்.

மானாவரி சாகுபடிதான் பிரதானம். வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு படையெடுக்கும் இளைஞர்கள்தான் அதிகம். உள்ளூரிலேயே தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய சிப்காட் தொடக்க நிலையில்தான் உள்ளது. 

40% வனப்பகுதியாக இருக்கும் தருமபுரியி வனத்துறை சார் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இன்னமும் பின் தங்கிய மாவட்டமாக இருக்கும் தருமபுரி லோக்சபா தொகுதியில் அடிப்படை வசதிகள் முதன்மை பிரச்சனை.

தருமபுரியில் வெல்லப் போவது யார்?: 

லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியும் தொடக்கத்தில் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்தது. திமுக- அதிமுகதான் இங்கு மோதும் நிலைமை இருந்தது. பாமகவும் அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் திடீரென பாமக தலைமை அக்கட்சித் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணியை வேட்பாளராக அறிவிக்க தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியாகிப் போனது.

 சவுமியாவின் மகள்கள் இருவரும் களமிறங்கி பிரசாரம் செய்ய கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகிறது தருமபுரி. பாமகவைப் பொறுத்தவரை கவுரவப் பிரச்சனையாக கருதுகிறது.

 கடந்த தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தோற்றார்; இத்தேர்தலில் அவரது மனைவி வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாமகவினர் முழு வீச்சில் களத்தில் பம்பரமாக சுழலுகின்றனர்.

 திமுகவும் அதிமுகவும் தங்களுக்கான பலமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கும் கணிசமான வாக்குகள் இந்த தொகுதியில் உள்ளது.  அதனால் நம் உன்னைப் போற்றி கடுமையாகவே உள்ளது.

சௌமியா அன்புமணியின் கூடுதல் பலம் என்னவென்று சொன்னால் அவர் அன்புமணியின் மனைவி என்பது ஒரு புறம் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பெண் பாராளுமன்ற நட்சத்திர வேட்பாளர் என்பதும் ஒரு கூடுதல் பலமாகவே கருதப்பட்டு வருகிறது.  இதைவிட அன்புமணியை காட்டிலும் இவரை எளிதில் அணுக முடியும் என்கிற நம்பிக்கையும் இவர் மீது உள்ளதால் பாட்டாளி சொந்தங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

 பக்கத்தில் உள்ள தொகுதி பொறுப்பாளர்கள் கூட தர்மபுரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணி செய்வதால் பிரச்சாரம் பலமாக உள்ளது.மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இவ்வளவு பலம் இருப்பதாக தெரியவில்லை.

இதைப் பார்த்து அசந்து போன முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொகுதியின் பொறுப்பு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்தை  கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது. 

 திமுக, அதிமுகவில் இவ்வளவு பெரிய ஒருங்கிணைப்பு இல்லை  வேட்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பணி செய்வதும் இல்லை என்கிற நிலை உள்ளது.

 திமுகவின் முன்னாள் எம்பி  செந்தில்குமார் யாருடனும் இணையாமல் தனியாக பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்.  இப்போதுள்ள நிலையில் செந்தில்குமாரின் எதிர்ப்பு வாக்குகள் மட்டுமல்ல அவரின் ஆதரவு வாக்குகளும் மாம்பழத்துக்கு விழுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

அதிமுகவில் யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியாத நிலையில் இரட்டை இலைக்கு வாக்களிப்பது ஏன் என்று    அக்கட்சியினர் நினைக்கத் தொடங்கி விட்டனர்.  எனவே அதிமுக வாக்குகளும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் தர்மபுரியில் மாம்பழம் மகுடம் சூட்டும் என்று உறுதியாக நம்பலாம்.