நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!

 நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....!  அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!

தர்மபுரி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரமும் சூடுபிடித்து வருகிறது..!!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின், மனைவி சௌமியா, சமூக அக்கறை நிறைந்தவர்.. நிறைய விழிப்புணர்வுகளை பெண்களிடம் ஏற்படுத்தி வருபவர். பெண் பிள்ளைகளுக்கான உத்வேகம் தரக்கூடிய வகையில், வீர்யம் மிக்க பேச்சுக்களை அவர்களுக்கு வழங்கி வருபவர்.. இவரது மோடிவேஷனல் பேச்சுக்களுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.

இவ்வளவு காலமாக, தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த சௌமியா, இந்த முறை புதிதாக போட்டியில் குதித்துள்ளார்.. சௌமியாவின் மொத்த குடும்பமும் அரசியல் துறையில் உள்ளவர்கள்.. சிறு வயதிலிருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர் என்பதாலும், புகுந்த வீடும் அரசியல் தலைவர்களின் வீடு என்பதாலும், சௌமியாவின் அரசியல் வருகை நிறைய எதிர்பார்ப்பார்புகளை தொகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது.

அன்புமணியைவிட சௌமியா, அனைவரிடமும் கலகலப்பாக பழகக்கூடியவர்.. மக்களிடம் இறங்கி சென்று பேசக்கூடியவர்.. எளிதாக பழகக்கூடியவர்.. அதனால், தர்மபுரி தொகுதியில் சௌமியாவையே வேட்பாளராக களமிறக்கினால், பாமகவுக்கு பெருத்த பலத்தை பெற்றுத்தருவதுடன், பெண்கள் மத்தியில் புதிய தெம்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதற்கேற்றபடி தீவிரமான பிரச்சாரத்தை சௌமியா துவங்கிவிட்டார்.

தற்போது, பிரச்சாரத்தில், சௌமியாவின் மகள்களும் வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியிருக்கின்றனர்... மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் தன்னுடைய அம்மாவுக்காக ஆதரவு திரட்டி கொண்டிருககிறார்கள்..

முதல் மகளான சம்யுக்தா, தன்னுடைய குழந்தைகள் அகிரா, மிளிர் ஆகியோருடன் வந்து சில நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. 2-வது மகளான சங்கமித்ரா, தன்னுடைய கணவருடன் தொகுதியிலேயே வந்து தங்கியிருந்து பிரச்சாரம் செய்கிறார். 3-வது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தருமபுரியில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இப்பெண்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் தொகுதி மக்களை மலைக்க வைத்து வருகிறது.. வீடு வீடாக சென்று நோட்டீஸ் தந்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தருமபுரியின் தண்ணீர் தேவையை என்னுடைய அம்மா தீர்த்து வைப்பார் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறார்கள். டாஸ்மாக் ஒழிப்பு குறித்தும் வாக்குறுதியை தந்து, ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

இந்த தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்று என் அம்மா நினைக்கிறாங்க.. அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், தொகுதியிலுள்ள பிரச்சனையை சரி செய்வார்.. தொகுதி பிரச்சனைகள் அனைத்தையும், அக்கா, தங்கை என நாங்கள் 3 பேருமே என் அம்மாவிடம் கொண்டுபோய் சேர்ப்போம். இது எங்கள் ஊர்.. நீங்கள் எங்களுடைய 

மக்கள், நாம்தான் நம்மை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்று சவுமியா மகள்கள் பேசுவதை மலைத்து பார்க்கிறார்கள் தருமபுரி மக்கள்.

ஓட்டு கேட்க போகுமிடமெல்லாம், "பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் மகள் வந்துருக்கேன்" என்று தங்களை என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசுகிறார்கள். கடைகள், வீடுகள் என எல்லா இடங்களிலும் ஓடிஓடி சென்று வாக்கு கேட்கிறார்கள்.

ஒரு வீட்டிற்கு வெளியில், உட்கார்ந்திருந்த பாட்டியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட மகள், மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்கள்.. மார்க்கெட்டில் விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடமும் வாக்கு சேகரிக்க சென்றபோது, அந்த பெண், அன்புமணியின் மகளுக்கு தலையில் மல்லிகைப்பூ வைத்து மகிழ்ந்தார்.

பாமக துண்டு: மொத்தத்தில் கழுத்தில் ஏறிய பாமக துண்டுடன், தமிழ் மொழியில் சரளமாகவும், இயல்பாகவும் பேசி தன்னுடைய அம்மாவுக்காக வாக்கு சேகரித்து வருவது தருமபுரி மக்களை கவர்ந்து வருகிறது...!!