RTE கல்விக் கட்டணம் விரைவில் உங்கள் வங்கி கணக்கில்.... நமது சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி....!

 RTE  கல்விக் கட்டணம் விரைவில் உங்கள் வங்கி கணக்கில்....  நமது சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி....!


2022 - 23 மற்றும்  2023 - 24 ஆம்  ஆண்டுகளுக்கான இரண்டு ஆண்டு RTE  கல்விக் கட்டண   பாக்கி உடனே வழங்க வேண்டும் என்று நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் திரு. கே. ஆர். நந்தகுமார் அவர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்தார்.

 கடந்த காலங்களில் அரசு  இதற்கு செவி சாய்க்காத காரணத்தால்  பிப்ரவரி 29ஆம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்துவது என்று தீர்மானித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட போது தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி 2024 பிப்ரவரி 29ஆம் தேதி நடத்த இருந்த மாபெரும் போராட்டத்தை நமது சங்கம் கைவிட்டது.

 தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகள் இயக்குனரகம் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் நமது சங்கத்திற்கு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தற்போது இதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

 இந்த அலுவலகம் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

2022-23 & 2023-24  ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான RTE Claim  தொடர்பான அனைத்து பணிகளும் ஏற்கனவே எல்லா மாவட்டத்திலும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு முடிக்கப்பட்டதற்கான இறுதி அறிக்கையை எந்தெந்த பள்ளிகளுக்கு எவ்வளவு தொகை என்பதற்கான Final list 07.03.2024  அன்று சென்னை அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான தொகை 2023-24   ஆம் ஆண்டு  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு  பள்ளிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளது.  எனவே விரைவில் இந்த தொகை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

2023-24   ஆம் ஆண்டிற்கான RTE Claim 2024 - 25  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதற்கு பிறகுதான் கிடைக்கும் என்று தெரிகிறது.

2022-23 ஆம் ஆண்டிற்கான தொகை  விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நமது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.