தளி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1 கோடியே 79 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள்
தளி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1 கோடியே 79 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அஞ்செட்டி ஊராட்சியில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மரியாளம் கிராமத்தில் ரூ.3 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
தொட்டமஞ்சி ஊராட்சி பிலிகுண்டலு கிராமத்தில் ரூ. 27 இலட்சம் மதிப்பில் நாட்றாம்பாளையம் -ஒகேனக்கல் சாலை முதல் பிலிகுண்டலு கிராமம் வரை தார் சாலை அமைக்கும் பணி.
அதேபோல நாட்றாம்பாளையம் ஊராட்சியில் MGSMT நிதியில் ரூ.1 கோடியே 44 இலட்சம் மதிப்பில் அஞ்செட்டி-நாட்றாம்பாளையம் சாலை முதல் ஆரோக்கியப்புரம் (வழி-அத்திமரத்தூர்) வரை தார் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.