ராயக்கோட்டையில் அருள்மிகு கோட்டை ஸ்ரீ குண்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 ராயக்கோட்டையில் அருள்மிகு கோட்டை ஸ்ரீ குண்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சூளரி கிரி சாலை கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஸ்ரீ குண்டி மாரியம்மன் கோயில் புதியதாக புணர் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 14ந்தேதி திருவிழா கொடியேற்றி ஊர் முளைப்பாலிகை இட்டு கங்கனம் கட்டப்பட்டது 18-ம் தேதி கிராமசாந்தியும் 19-ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, 20-ம் தேதி மங்கல இசையுடன் திவ்யபிரபந்தபாராயணம், வேதபாராயணம், உட்பட பூஜைகள் நடைப்பெற்றது கோபர கலசம் மூர்த்திக்கு பாவன அபிஷேகம் பரிவார தேவதைகளுக்கு யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தனம் நடைப்பெற்றது நேற்று காலை திருக்குடம் புறப்பாடு சத்தி கலசங்கள் கோயில் வலம் வந்து விமான கோபுரம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து மங்கள ஆர்த்தி தீர்த்த பிரசதம் வழங்கப்பட்டது மூளைப்பாலிகை கரைத்து மஞ்சள் நீராட்டி கங்கை பூஜை நடந்தது விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டு அம்மனை வழிப்பட்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 24 நாட்கள் மண்டல பூஜை நடைப்பெற உள்ளது நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்.வி.ஆர் குரூப்ஸ் மற்றும் கோட்டை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.