ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக துணை பொதுசெயலாளர் கேபி.முனுசாமி அவர்கள் பங்கேற்பு

 ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக துணை பொதுசெயலாளர் கேபி.முனுசாமி அவர்கள் பங்கேற்பு 

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன்,மருமகள் பட்டியலின மாணவிக்கு கொடுத்த சித்ரவதையையும் அதற்கு துணை போகும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக போராட்டம் நடத்தப்பட்டு வரும்நிலையில்

ஓசூர் மாநகராட்சி, மின்வாரிய அலுவலகம் முன்பாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி அவர்களின் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் K.P.முனுசாமி அவர்கள் பங்கேற்று உறையாற்றினார்..

முன்னதாக திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்

 இறுதியாக நன்றியுரை ஓசூர் பகுதி செயலாளர் ராஜு ஆற்றினார்.

Hosur Reporter: E. V. Palaniyappan