கெலமங்கலம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா

 கெலமங்கலம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் பகுதியில் உள்ள அரசினர்    பாலிடெக்னிக்   கல்லூரியில் பொங்கல் விழா  நடைபெற்றது. 

விழாவில் கல்லூரி முதல்வர் கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். கல்லூரி  துனை முதல்வர் சாந்தி மீனா  முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரியின் ஆசிரியர்கள் ஒவ்வொரு துறை சார்ந்த மாணவ மாணவிகள், தனித்தனியாக பொங்கல்.வைத்து சூரிய வழிபாடு செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்

விழாவில் கல்லூரி முதல்வர் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்தரைத்தார்.

கல்லூரியின் கலைமன்றம் சார்பில் நடைபெற்ற பல்வேறு நாட்டுப்புற நடனங்களில் மாணவிகள் பங்கேற்றனர்.

கோல போட்டிகள் உட்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன

 இதில் கல்லூரி பொருளாளர் வெங்கடாசலம் பள்ளி உதவியாளர் செல்வகுமார் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். . விழா ஏற்பாடுகளை கல்லூரி மாணவ மன்ற குழுவினர் செய்திருந்தனர்.