ஒரு நாள் ஊதியம் வழங்குவதில் இருந்து விருப்பம்...!!

 ஒரு நாள் ஊதியம் வழங்குவதில் இருந்து விருப்பம்...!!

ஒரு நாள் ஊதியம் வழங்குவதில் இருந்து விருப்பம். சில காரணங்களால் நான் என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக தர விருப்பம் தெரிவிக்கிறேன் .                 

 1. நான் ஒரு கழகத்தின் மாநில நிர்வாகி என்பதால் மாநில அமைப்பின் முடிவுக்குக்கட்டுப்பட வேண்டியது எனது கடமை யாகிறது.    

2. நான் எனது ஆளும் அரசிடம் எந்த அளவுக்கு எனது உரிமைகளைத் தட்டிக் கேட்கிறனோ அது அளவு பேரிடர் காலங்களில் இந்த அரசுக்கு உதவுவதை எனது கடமையாக கருதுகிறேன் .                        

  3. இந்த அரசாங்கத்தால் எனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலையில் இந்த ஒரு நாள் ஊதியம் நிச்சயம் ஈடு செய்யாது .    

4. நான் பணிக்கு வந்ததிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் இதுவரை ஒரு முறை கூட நிவாரண நிதி வழங்க மறுத்ததில்லை, அதோடு அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு 10 முறைக்கு மேலாக ஒருநாள் சம்பளத்தை கருத்தாலும் கரத்தாலும்உழைக்கும் மக்களுக்காக  என் கடமையில் தவறவில்லை!

 இவண், ‌.                                      

 வாரா