உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!

உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:   வலுக்கும்  கோரிக்கை....  முதலமைச்சர் கவனிப்பாரா...?!

*வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று  புதிய ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டமாக பொள்ளாச்சி  மாவட்டத்தையும். தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக உறுதியான தகவல்கள் செய்திகள் வெளி வருகின்றன.*

*பொள்ளாச்சி பாலியல் பிரச்சனைக்கு பின்பாக பொள்ளாச்சி என்றாலே பெயர் கெட்டு விட்டது.* *மரியாதையும் கெட்டு விட்டது‌. பொள்ளாச்சி என்று சொன்னால் வெளியில் மரியாதை இல்லாமல் உள்ளது.* *பொள்ளாச்சி என்றாலே காரி துப்புகின்றார்கள். இப்பகுதி மக்களை  வெளிமாவட்ட மக்கள் கேவலமாக எண்ணுகிறார்கள்.*

*பாலியல் பிரச்சனைக்கு பின்பாக  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வெளியூர்களில் பொள்ளாச்சி என்றாலே காரி டிக்கியில் துப்புகிறார்கள்.*

*எனவே இது போன்ற பல காரணங்களுக்காக பொள்ளாச்சி மாவட்டம் என்று அறிவிப்பதை உடுமலை மாவட்டம் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும்.*

*பொள்ளாச்சி மாவட்டம் என்ற பெயரில் தான்,* *மாவட்ட பெயரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார்கள் என்றால்,*

*உடுமலையை  தலைமையிடமாகக் கொண்டு கலெக்டர் அலுவலகம், எஸ் பி அலுவலகம், மாவட்ட நீதிமன்றங்கள் போன்ற மாவட்ட தலைமை அலுவலகங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் போன்றவற்றை உடுமலையில் அமைக்க  வேண்டும்.* 

*எனவே மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள் இப்பகுதி பொதுமக்களின் நலனை, மரியாதையை, சுயமரியாதையை கருத்தில் கொண்டு உடுமலை மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும்.*  

*இவை இரண்டில் ஏதாவது ஒன்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அன்புகூர்ந்து செய்ய வேண்டும்.*

*பெரும்பாலான பொது மக்களின் கோரிக்கையாகிய வேண்டுகோளாகிய இதை கொங்கு நாட்டிற்கு செய்கின்ற  ஒரு சேவையாக நினைத்து, மாண்புமிகு முதலமைச்சர் மு‌.க‌‌.ஸ்டாலின் அவர்கள் உடுமலை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.*

*இப்படிக்கு....*

*என்றும் அன்புடன்.......*

*உடுமலை P.S.K.செல்வராஜ்,*

*98430 87561*

*நிறுவனர் &, தலைவர்,*

*எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் சங்கம்*.  

*அரசு பதிவு எண் 113/21* 

*அனைத்துலக தலைமை அலுவலகம்,* 

*கச்சேரி வீதி,* 

*பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில்,* 

*VRV காம்ப்ளக்ஸ்*

*உடுமலைப்பேட்டை . - 642 126*