ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மாமன்ற உறுப்பினர்களுடன் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

 *ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மாமன்ற உறுப்பினர்களுடன் கொண்டாடிய சமத்துவ பொங்கல்..*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. முன்னதாக, பாரம்பரிய தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண கோலமிட்டு, கால்நடைகள் அலங்கரித்து, புதுப் பானையில் பொங்கல் இடப்பட்டது. பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்ற பின் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலோ பொங்கல் என அனைவரும் உற்சாககுரல் எழுப்பினர். 

இந்த நிகழ்ச்சியில், சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்தவ மத பேராயர், இஸ்லாமிய மத குருமார் மற்றும் இந்துமத அர்ச்சகர் உள்ளிட்டருடன்  மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, துணை மேயர் ஆனந்தையா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கால்நடைகளான பசு மற்றும் கன்று குட்டிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.