கீழக்கரை அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை!!

 கீழக்கரை அரசு மருத்துவமனையை  மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை!!

ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கிறது என்பதை  அரசு சார்பாக பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்  இது மிக குறைவாக இருக்கிறது 70,000ஆயுரம் மக்கள் இருக்கும் ஊர்,  சுற்றுவட்டார பகுதிகளில் பல கிராமங்கள் உள்ளது சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை தான் ஏழை, எளிய மக்கள் நாடி வருகிறார்கள் சாதாரண அடிப்படை வசதிகள் தான் உள்ளது உயிர் காக்கும் சிகிச்சை இல்லை கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டும் , பணியிடங்களை முழுமைப்படுத்த வேண்டும் , செவிலியர்களை அதிகப்படுத்த வேண்டும்   துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்  அதனால்  கூடுதலாக அரசு நிதி ஒதுக்க வேண்டும்  கீழக்கரை மக்கள் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தை அங்கீகரிக்கிறார்கள் கீழக்கரை மக்களுக்கு உண்டான தேவையை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள்  என்னுடன் 19 வார்டு திமுக கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ் காக்கா  அவர்கள்,  ட்வின்ஸ் ஆம்புலன்ஸ் சகோதரர்கள் ரத்த உறவு கபிர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

நகர்மன்றத்தில் நகர் மன்ற தலைவர் துணைத் தலைவர் இருக்கக்கூடிய கவுன்சிலர்கள் அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்த வேண்டும்  

மாவட்ட ஆட்சியரிடமும் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொன்னேன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இரண்டு நபர்கள் அரசு சார்பாக இருக்கிறார்கள் இரண்டு டெக்னீசியன்கள் இருக்கிறார்கள் ஆனால் அரசு சார்ந்து  அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இடம் கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது உடனடியாக அரசு மருத்துவமனையில் அரசு சார்பாக உள்ளே இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

  ராமநாதபுரம் மாவட்ட நிருபர் அன்வர் அலி