10,11 & 12ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணை
2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
செய்முறை தேர்வு:
2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் கல்வி ஆண்டு தொடக்கத் திலேயே தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுக்கு ஆயத்த மாவதற்கு எளிதாக இருக்கும் வகையில் அறிவிப்புகள் முன்னதாக தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் தற்போது பொதுத் தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த விவரங்கள் வெளியாகி யுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர் களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடக்க உள்ளது.
இதன் பின்னர் முறையே மாணவர் களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1, மார்ச் 4 மற்றும் மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் Everything அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.