தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம்
இன்று 04.12.2023 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் ஆதனூர் கிளாப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் G.முருகன், மாநில துணை தலைவர் N.மாரி, மாநில பொருளாளர் G.சதீஷ் மாநில சிறப்பு தலைவர் R.துரைசாமி மாநில கௌவுரவத் தலைவர் K.விஜயகுமார், மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன்,மாநில செயற்குழு உறுப்பினர் K.Aமணிகண்டன் ஆகியோர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் A.சோழபாண்டியன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.சிவா மற்றும் உறுப்பினர்கள் S.ஐயப்பன் , S.கல்வராயன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் சார்பாக தீர்மானம் 23.11.2023 திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் G.ராஜசேகரன் s/o கோவிந்தசாமி அவர்கள் குறைத்தீர்ப்பு மனு கொடுத்தார்.ஆனால் அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதற்கு முன் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்திலும் சங்கத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது அனைத்து துறை அலுவலர்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் முறையாக கலந்து கொள்வதில்லை இதனால் விவசாயிகளுக்கு தங்கள் குறையை பற்றிய முறையான விளக்கம் கொடுக்கப்படுவதில்லை .நடவடிக்கை எடுக்கப்படாத குறை தீர்ப்பு கூட்டம் விவசாயிகளுக்கு பயனற்றுப் போகிறது. எனவே விவசாயிகள் கொடுக்கும் அனைத்து மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காத மனுக்களின் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.......