கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம ‌ வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் பயிற்சி

கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம ‌ வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் பயிற்சி 

 கெலமங்கலம் வட்டாரம் வேளாண்மைத் துறையின் கீழ் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம ‌ வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம்மாக திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்து பதினொன்று கிராமங்களை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு கிராம  வேளாண் முன்னேற்ற குழு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு துணை வேளாண்மை  இயக்குநர்  உழவர் பயிற்சி நிலையம்   மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகிரி சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்  விவசாயிகள் கடன் அட்டை முக்கிய துவம் குறித்து விளக்கினார்.வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் கிருஷ்ணகிரி  பன்னீர் செல்வம் அவர்கள்  இயற்கை விவசாயத்தின்    அவசியம்  மற்றும் விதை நேர்த்தி செய்தன்  பயன் குறித்து விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர்  வெற்றி வேல் அவர்கள்  மானிய திட்டம் மற்றும்  சொட்டு நீர் பாசனம் மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கினார் உதவி வேளாண்மை அலுவலர் வினோத் குமார் அவர்கள்   விதை நேர்த்தி செயல் விளக்கம்  செய்து காட்டினார் மற்றும்  உயிர் உரங்களின் பயன்கள் குறித்து விளக்கினார்.அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் கீதா  அட்மா திட்டம்   மற்றும்  உழவன் செயலி குறித்து விளக்கினார் .

B. S. Prakash 

 இப்பயிற்சியில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கீதா நன்றி கூறினார்.