திமுக தலைவர்கள் இந்தி கற்க வேண்டும்.. டிஆர் பாலுவிடம் கோபப்பட்ட நிதிஷ்?

 திமுக தலைவர்கள் இந்தி  கற்க வேண்டும்.. டிஆர் பாலுவிடம் கோபப்பட்ட நிதிஷ்?

இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசினார்.

அப்போது அவர் ஹிந்தியில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று டி ஆர் பாலு கோரிக்கை விடுத்த நிலையில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆனால் இதற்கு நிதிஷ்குமார் கடும் கோபமடைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை நிறுத்துமாறு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன. திமுக தலைவர்கள் இந்தியை கற்க வேண்டும் என்றும் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போன போதை ஆங்கிலமும் அவர்களுடன் போய்விட்டது என்றும் தெரிவித்ததாகவும் தனது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை உடனே நிறுத்துமாறு நிதீஷ் குமார் கோபத்துடன் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி தெரியாது போடா என தமிழகத்தில் பேசும் திமுக, நிதிஷ்குமார் கோபமாக கூறிய போது அமைதியாக இருந்ததாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்