பெண் குழந்தைகளுக்கு அரசு ரூபாய் ஒரு லட்சம் வரையிலான நிதி உதவி

 பெண் குழந்தைகளுக்கு  அரசு ரூபாய் ஒரு லட்சம் வரையிலான நிதி உதவி 

பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பிறப்பு முதல் 18 வயதை அடையும் வரை மாநில அரசு ரூபாய் ஒரு லட்சம் வரையிலான நிதி உதவி வழங்கி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ருபாய் ஒரு லட்சம் நிதியுதவி:

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் பெண் குழந்தைகளின் நலனிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டுகளை கொண்ட குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் முதலில் ₹5000 நிதி உதவி செலுத்தப்படும்.

பின்னர் குழந்தை ஒன்றாம் வகுப்பில் சேரும்போது ரூபாய் 6000, ஆறாம் வகுப்புக்கு செல்லும்போது ரூபாய் 7000, 9ஆம் வகுப்புக்கு சேரும் போது ரூபாய் 8000-மும் வழங்கப்படும். இறுதியாக குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் நிலையில் ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி பெண் குழந்தைக்கு மாநில அரசால் வழங்கப்படுகிறது. இது குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்யாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக அளிக்கப்படுவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்